ஊடுருவியவர்களால் பாரத தேசத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள்

நாடு முழுவதும், குடியுரிமை சட்ட திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பும் – தேசிய குடியுரிமை பதிவேடுக்கு எதிர்ப்பு
தெரிவித்து ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெள்ளிக் கிழமையில் மட்டும் அதிக அளவில்
இஸ்லாமியர்களை முன்னிலைப்படுத்தியே போராட்டங்கள் நடக்கின்றன. வன்முறையாக மாறிய போராட்டங்களும், துப்பாக்கி சூட்டில் பல அப்பாவி உயிர்கள் பலியானதும் , ஏன் என்றே பலருக்கு புரியாத புதிராக இருக்கிறது.

அமைதியான போராட்டங்களில் வன்முறை ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி கவலை படுபவர்கள் ஒரு சிலரே
இருக்கிறார்கள். பாரத தேசத்தை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கையாலும், முறையற்ற கண்ணோட்டத்தினாலும், தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகின்றது. 1947-ல் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடுத்த முற்பட்டதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கொண்டது தவறானது என்றும், பின்னர் ஆட்சியில் நிலையாக தங்கி விட வேண்டும் என்பதற்காக சிறுபான்மையினரை தாஜா செய்ததாலும், இக்கட்டான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது.

1947-ல் நாடு பிளவு பட்ட போதே, சில நச்சு விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. வகுப்பு மோதல்கள் நடக்க துவங்கிய போது, சமாதானம் என்ற பெயரில் சிறுபான்மையினரை கண்டிக்க தவறியதும், அவர்களின் தவறுகளை
கண்டிக்காமல், மேல் பூச்சு வேலையை காங்கிரஸ் கட்சி செய்தது. பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய நாடு உருவாகிய
பின்னரும், பாரத தேசத்தை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடந்த பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றுதான், மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான
இஸ்லாமியர்கள் பாரத தேசத்தில் ஊடுருவினார்கள். மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா, போன்ற வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் ஊடுருவி, உள்ளுர் மக்களுக்கு போட்டியாக மாற தொடங்கினார்கள். இதன் அடிப்படையில் மேற்கு வங்க மாநிலத்தின் நிலைமையை சற்றே ஆய்வு செய்ய வேண்டும். வேறு எந்த மாநிலத்தையும் விட பாரத அளவில் புகழ் பெற்ற மாநிலம் வங்க மாநிலம். புகழ் பெற்று விளங்கிய புரட்சியாளர்களையும், தேசிய, சமூக தலைவர்களையும் வழஙகும் ஜீவ ஊற்றாக விளங்கிய மாநிலம் வங்கமாநிலம். வங்காள நெருப்பு சீக்கிரமே அணைக்காவிட்டால், அது தேசம் முழுவதும் பரவி விடும் என கூறியவர் வைஸ்ராய் லார்டு கர்சான். ஆனால் இன்று பிரிவினைக்கும், வன்முறைக்கும் முதன்மை மாநிலமாக மாறி வருகிறது. வங்க மாநிலம் முழுவதும் தங்கள் வசம் வர வேண்டும் என ஆசைப் பட்டவர் ஜின்னா. டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜி மட்டுமில்லை என்றால், இன்று மேற்கு வங்க மாநிலமே உருவாகியிருக்காது. இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். மேற்கு வங்க மாநிலம் உருவான கதையை பார்ப்பதை விட, மேற்கு வங்க மாநிலம் இஸ்லாமியர்களின் பிடியில் சிக்குன்டுள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். இடதுசாரி கம்யூனிஸ்ட் தலைமையில் 30 ஆண்டு கால ஆட்சியிலும், தற்போது மம்தா பாணர்ஜியின் ஆட்சியிலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடியுள்ளது.

 

பிரிட்டிஷ்காரர்களின் திட்டப்படி எவ்வாறு கிழக்கு வங்காளத்தை தாருல் இஸ்லாமாக மாற்ற ஆர்வமும் வெறியும் இஸ்லாமியர்களிடம் உருவாக்க திட்டமிட்டார்களோ, அதே போல் தற்போது மம்தாவும், மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமாக மாற்றும் இஸ்லாமியர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார். 4.8.2005-ல் பாராளுமன்றத்தில் பங்களா தேஷ் அகதிகள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். இதை எப்போது விவாதிக்க போகிறீர்கள். என கூறி கையிலிருந்த காகிதங்களை கிழித்து எறி்ந்து சபையின் கௌரவத்தை காற்றில் பறக்கவிட்டவர். இன்று ஊடுருவிய இஸ்லாமியர்களுக்காக வக்காலத்து
வாங்கி வன்முறையில் ஈடுபடுகிறார். வாக்கு வங்கி அரசியல் என்பதை தவிர வேறு எதுவும் கிடையாது.

இந்நிலைக்கு தள்ளப்பட முக்கியமான காரணம், விட்ட குறை அல்லது தொட்ட குறைாயக இஸ்லாமியர்களின் உறவு இருப்பதால். முந்தைய கம்யூனிஸ்ட் அரசாங்கம், ஊடுருவிய இஸ்லாமியர்களை கணக்கெடுக்கவில்லை. ஹிந்துக்களை மட்டும் கணக்கெடுத்து திருப்பி அனுப்பிய சம்பவங்களும் உண்டு. 1977 முதல் 1991 வரை 64,125 ஹிந்துக்கள் ஊடுருவியதாகவும், இதே கால கட்டத்தில் 1,51,175 இஸ்லாமியர்கள் ஊடுருவியதாகவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்தார்கள். இதே சமயத்தில் முறையான விசா பெற்று இந்தியாவிற்கு வந்த பங்களாதேஷ் நாட்டினரின் எண்ணிக்கை 5,88,491 பேர்கள். இவர்கள் விசா காலம் முடிந்து பின்னரும் தங்களின் தாய் நாட்டிற்கு திரும்பவில்லை.

ஊடுருவிய இஸ்லாமியர்களின் துணையோடு, மேற்கு வங்க மாநிலத்திலேயே தங்கி விட்டார்கள். இவர்களை
வெளியேற்ற ஏன் உரிய நடவடிககை எடுக்கவில்லை. இவ்வாறு ஊடுருவியவர்களும், முறையான விசா பெற்று வந்த பங்களாதேஷ் நாட்டினரும் தங்கிய மாவட்டம், மேற்கு வங்கத்தின் எல்லைப்புற மாவட்டங்கள். 1983-ல் மத்திய அரசுக்கு , ஒரு தொண்டு நிறுவனம் அனுப்பியகடிதத்தில், பங்களாதேஷ் நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கரீம்பூர் மற்றும் சப்ரா மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்காணவர்கள் மேற்கு வங்கத்தில் ஊடுருவியுள்ளார்கள் என ஆதாபூர்வமாக சில சம்பவங்களை சுட்டிக்காட்டி எழுதியுள்ளார்கள். இவ்வாறு சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் மற்றும் மியன்மா் ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் தங்கியுள்ள பகுதி, எல்லையில் புதிதாக முளைதுள்ள சட்ட விரோத மதராஸாக்கள். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மதராஸக்களின் எண்ணிக்கையை விட பல மடங்கு சட்ட விரோத மதராஸக்கள் செயல்படுகின்றன. மம்தா ஆட்சிக்கு வந்தவுடன் எவ்வித ஆய்வும் இன்றி சட்ட விரோத மதராஸக்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

மம்தா பாணர்ஜி காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்த போது, சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ்
இஸ்லாமியர்கள், வங்க முஸ்லீம்களுக்காக தனி சுதந்திரமான இடம் தேவை என Swadhin Muslim Bango Bhoomi
ஒரு புதிய கோஷத்தை துவங்கினார்கள். இந்த கோஷம் எவ்வளவு ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்டிய பின்னரும்,
ஆட்சியிலிருந்த கம்யூனிஸ்ட்கள் கண்டு கொள்ளவில்லை. முந்தைய கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்ன வழிமுறைகள பின்பற்றியதோ அதே வழி முறைகளை மம்தாவும் பின்பற்றுகிறார். மேற்கு வங்கத்தின் செய்தி துறை அமைச்சாராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியா, 1992-ல் மேற்கு வங்க உள்துறை செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், தேர்தல் பொறுப்பாளர்களும், மத்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய குறிப்பின் படி, வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவரின் பெயரை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றிக்கை அனுப்பினார். ஆனால் மாநிலத்தில் ஆண்ட இடதுசாரி முன்னியின் அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்தின் உத்திரவை நிராகரித்து, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்க வேண்டாம் என உத்திரவிட்டார்கள். இதுவும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக நடந்த தேச விரோத செயலாகும். இதே செயலை தான் தற்போது மம்தாவும் செய்கிறார்.

1979 – 1983-ல் அஸ்ஸாமில் தனிச் சட்டம் கொண்டு வந்த இந்திரா காந்தி, ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை அளித்தவர், அதே கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து  இந்தியாவிற்கு பாதுகாப்பு கருதி வந்த மடுவா என்ற தலித்துக்களுக்கு குடியுரிமை அளிக்கவில்லை. ஏன் மம்தா பனார்ஜி மத பாகுபாடு பற்றி கேள்வி கேட்கவில்லை. ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்கள் அரசியல் விளையாட்டின் மூலம் அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள். 1971 போருக்கு பின்னர் இந்தியாவிற்குள் ஊடுருவியவர்களை. இந்திரகாந்தி திருப்பி அனுப்பாமல், அரசியல் ஆதாயத்திற்காக , குடியுரிமை வழங்கியது ஏன் என்ற கேள்வியை எவரும் கேட்கவில்லை. ஊடுருவிய இஸ்லாமியர்களால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மம்தா புரிந்து கொண்டாரா என தெரியவில்லை.

மேற்கு வங்க மாநிலத்தில் ஊடுருவிய பங்களா தேஷ் மற்றும் மியான்மர் ரோஹிங்கியா இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர், பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்துல் முஜாஹிதீன் பங்களா தேஷ், பாகிஸ்தான் தலிபான் போன்றவற்றுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அல்-நாசூரா என்ற இஸ்லாமிய அமைப்பு ஊடுருவிய இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்து கொண்டு இருக்கிறது. 2014 அக்டோபர் மாதம் 2ந் தேதி தற்செயலாக மேற்கு வங்க மாநிலத்தில் பர்துவன் பகுதியில் வெடித்த வெடி குண்டு, மத்திய அரசின் ஆய்வு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் போது வெளி வந்த தகவல்கள், பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஜமாத் உத் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற பயங்கரவாத அமைப்பினர் வெடி குண்டு தயாரிக்கும் போது வெடித்தது என்பதாகும். இந்த விசாரனை முடுக்கி விட்ட போது, மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள சட்ட விரோத மதராஸக்கள் பற்றிய விவரங்கள் வெளி வந்தன. 2019 ஜீலை மாதம் ஷியா வகஃப் போர்டு சேர்மன், வசீம் ரிஷ்வி என்பவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், —- if Madarasas are not shout down, about half of the country’s population will became supporters of the ISIS ideology in 15 years time’. என குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பங்களாதேஷ் நாட்டில் தடைவிதிக்கப்பட்ட ஜமாத் –உல்-முஜாஹிதீன் பங்களா தேஷ் பயங்கரவாத அமைப்பினர் தஞ்சம் புகுந்த பகுதி மேற்கு வங்க மாநிலம்.  நெய்டா மற்றும் மூர்ஷிதாபாத் மாவட்டங்களில் எல்லையில் அமைந்துள்ள 17 கிராமங்களில் 147 விதமான ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதரவு போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டன. போஸ்டரில் உள்ள வாசகம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்கு சுதந்திரமான மொகல்ஸ்தான் என்ற நாடு உருவாக்கப்படுகிறது என்பதாகும். இது இந்தியாவில் மற்றொரு பிரிவினையின் துவக்கமாகும். இந்த பிரிவினைக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாகவே, ஊடுருவிய இஸ்லாமியர்களின் பங்கும் உள்ளது.

பர்துவான் குண்டு வெடிப்பின் விசாரனையில் தெரிய வந்த முக்கியமான செய்தி, பங்களா தேஷ் நாட்டிலிருந்து
ஊடுருவிய இஸ்லாமிய பெண்கள், ஏற்கனவே முளை சலவை செய்த ஹைதராபாத், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ளபெண்களை மேற்கு வங்க மாநில எல்லையில் உள்ள மதராஸாக்களில் தங்க வைத்து , மொகல்ஸ்தான் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு சட்ட விரோத மதராஸக்களில், தீவிரவாத பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த பயிற்சியில் பெண்களையும் ஈடுபடுத்துகிறார்கள். பெருமளவில் இவ்வித மதராஸக்கள். ஊடுருவிய பங்களா தேஷ் நாட்டினருக்கும், மியான்மர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ரோஹிங்கிய இஸ்லாமியர்களும் அடைக்கலம் கொடுக்குமிடமாகவே மாறிவிட்டது.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு, இந்தியாவில் புழகத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் பற்றிய விவரங்கள சற்று
கவனித்தால், பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. மேற்கு வங்க மாநிலத்தின் வழியாகவும், மேற்கு வங்க
மாநிலத்தின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கள்ள நோட்டுகள் பதுக்கி வைக்ப்பட்டுள்ளதாகவும் உளவு
துறையினர் தெரிவித்துள்ளார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியுள்ள ஹூஜி அமைப்பின் பொறுப்பாளரான மும்தி அப்துல் ஹன்னன் வசம் ரூ50 லட்சம் கள்ள நோட்டுகளை ஒப்புடைக்க முற்பட்ட, டாக்காவின் நௌசத் கான் கைது செய்யப்பட்ட போது தான் தெரிய வந்தது. நாட்டைப் பற்றிக் கவலைபடக் கூடிய பெண்மணி மம்தா கிடையாது. ஏன் என்றால் ஊடுருவிய பங்களா தேஷ் இஸ்லாமியர்களால், மேற்கு வங்க மாநிலத்தில் நடத்திய பயங்கரவாத தாக்குதலை நினைத்துப் பார்க்கவிலலை. 2014 முதல் 2017 வரை 3,000 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஊடுருவியுள்ளார்கள். இவ்வாறு ஊடுருவியவர்களால் தான் புத்த கயா, பர்துவான் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் இடங்கள் எல்லையில் உள்ள மதரஸாக்கள். பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடப்பது கூட இந்த மதரஸாக்களில். மம்தா ஆட்சியில் தான் அதிக அளவில் எல்லையில் மதரஸாக்கள் உருவாகின. இந்த மதரஸாக்களுக்கு மானிய உதவி அளித்ததும் மம்தாவின் ஆட்சியில் தான். ஆகவே பயங்கரவாதிகளுக்கு பால் ஊற்றி வளர்க்க காரியத்தை மம்தா செய்கிறார். இவரின் முதன்மையான நோக்கம், தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத சம்பவத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட 55 பேர்களும் ஹூஜி அமைப்பினர், மாநிலம் முழுவதும் ஹூஜி அமைப்பைச் சார்ந்த 565 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விசாரனையின் போது, இவர்கள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் என்பது தெரிய வந்தது. மம்தாவின் ஆட்சியில், மேற்கு வங்க மாநிலம் ஒரு காஷ்மீராக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கு முதன்மையான காரணம் தேச பக்தி நிறைந்த ஒரு மாநிலத்தில், தேச பக்தியை ஊட்ட வேண்டிய அவசியம்
ஏற்பட்டுள்ளது.