ஊடுருவல் இல்லை

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு, ஒரு பேட்டியில், ‘அருணாச்சல பிரதேசத்தில் சீனா புதிய உள்கட்டமைப்புகள், கிராமங்களை உருவாக்கியுள்ளது என்று சமூக ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் கூறப்பட்டது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மோனிகோங் கிராமத்திற்குச் சென்று கிராம மக்களுடன் நான் நேரடியாக உரையாடினேன், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருடனும் கலந்துரையாடினேன்.  அப்படி எந்த கட்டுமானங்களையும் சீனா உருவாக்கவில்லை என அறிந்துகொண்டேன். மேலும், சீனா உருவாக்கியுள்ள கிராமங்கள் அவர்கள் நீண்டகாலமாக ஆக்கிரமித்துள்ள திபெத்திய பிரதேசத்தில்தான் இருக்கின்றன. சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தில் சீனா கையெழுத்திடவில்லை. இது பாரதத்திற்கு கவலையளிக்கிறது. சீன அரசு சியாங் ஆற்றில் பெரிய அணையைக் கட்டினால் அருணாச்சலப் பிரதேசம், அசாம், வங்கதேசத்தில் உள்ள சியாங் போன்ற கீழ் நீரோடைகள் வறண்டு போகும். சர்வதேச அரங்கில் மத்திய அரசு தூதரக ரீதியில் இந்தப் பிரச்னையை கையாள்கிறது’ என தெரிவித்தார்.