உ.பி. ராமாயணத்தில் சகுனி, கைகேயி சதிகள் சதிராட்டம்!

ஜாம்ஷட்ஜி டாடாவின் மகன் ரத்தன் டாடா, அக்குழுமத்தின் தலைமைப் பதவியை ஏற்றால் யாரும் விமர்சனம் செவதில்லை. சர்க்கரை நோ நிபுணர் டாக்டர் விஸ்வநாதனின் ஆஸ்பத்திரியை அவரது மகன் டாக்டர் மோகன் தலைமை ஏற்றால் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுவதில்லை. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் கார்த்தியும், சூர்யாவும் நடிகர்களானால் யாரும் எதிர்ப்பதில்லை.

ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் தலைவரானாலும் முலாயம்சிங் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வரானாலும் – எந்த அரசியல்வாதியின் வாரிசும் பதவியைத் தொடர்ந்தால், கடுமையான விமர்சனம் எழுவது ஏன்?

காரணம் இல்லாமல் இல்லை! ரத்தன் டாடா நிர்வாகத்தை ‘சோதப்பினால்’ நஷ்டம் டாடா குரூப்பிற்குத்தான். அது சரியத் தொடங்கும். டாக்டர் மோகன் சரியாக வைத்தியம் செயாமல் போனால், ஆஸ்பத்திரிக்கு மூடுவிழா நடக்கும். கார்த்தியும் சூர்யாவும் நடிக்காமல் போனால், மார்க்கெட்டை இழந்து ஏதாவது கம்பெனிக்குத்தான் வேலைக்குப் போகணும்.

இந்த மூன்றுமே அரசியல் வாரிசுகளுக்கு பொருந்தாது. அவர்களின் ஒரே தகுதி ‘அப்பன்’ தலைவர். ஆகவே ஆட்சி உரிமை மன்னராட்சி போல எனக்குத்தான் என்பது. அதனால்தான் அகிலேஷும் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் இன்னும் குப்பை கொட்ட முடிகிறது! இவர்கள் சோதப்பினால், நாட்டுமக்களுக்கு தான் நஷ்டம். இவர்களுக்கோ, இவர்கள் குடும்பத்திற்கோ அல்ல!

இன்று உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் வெடித்திருக்கிறது ஒரு மாபெரும் ‘குடும்ப யுத்தம்’, ‘பதவிப் போர்’, ‘வாரிசு சண்டை’.mulayam-family

அரசியல் வானில் முலாயம்சிங்கின் துரோகம் நாடறிந்தது! கூட்டு சேர்வதுபோல, உதவிபுரிவதுபோல நடந்துகொண்டு விட்டு, பிறகு ‘பல்டி அடிப்பதும்’ ‘டிமிக்கி கொடுப்பதும்’ முலாயம் ஸ்டைல்!

அப்படித்தான் அவரது ஆருயிர் மனைவி மாலதி தேவிக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு, கட்சியின் தொண்டன் ஒரு பொட்டிக்கடைக்காரனின் மனைவி சாதனா குப்தாவை ‘தனதா’க்கிக் கொண்டார். இவர்களுக்கு பிரதீக் என்கிற மகனும் உண்டு. ஒரிஜினல் மனைவி மாலதிதேவி 2003ல் மரித்துப் போனபிறகு அரசியல் புரோக்கர் அமர்சிங்கின் அழுத்தத்தின் காரணமாக 2007ல் சாதனா குப்தா, சாதனா முலாயம் யாதவாக அறிவிக்கப்பட்டு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

முலாயம், கருணாநிதி இருவருமே ‘துணைவிகளை’ சேர்த்துக் கொண்டதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல! இதில் யார் அதிகமான கிரிமினல் என்பதை பட்டிமன்றம் போட்டே பேசலாம்! இருவருமே கொஞ்சம் காலத்துக்கு தங்கள் திருமணங்களை ரகசியமாகவே வைத்திருந்தனர். ‘மாட்டிக் கொண்டவுடன்’ தனி வீடெடுத்து அதிகாரபூர்வ அறிவிப்பும் போக்குவரத்தும் தொடங்கினர்!

சரி! இப்போது உ.பியில் என்னதான் நடக்கிறது? ராமாயணம் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்குள் அரங்கேறியிருக்கிறது! உ.பி. அயோத்யாவில் அப்பாவி கர சேவகர்கள் மீது 1990 அக்டோபர் 30 அன்று துப்பாக்கி சூடு நடத்தி கொன்றவர் முலாயம். அவர்களின் ஆவி முலாயம் குடும்பத்தை தாக்க ஆரம்பித்திருக்கிறது.

ராமாயணத்தில் கைகேயி நல்லவள்தான். ஆனால் கூனியின் சோல்கேட்டு தசரதனை ‘டார்ச்சர்’ செது ராமனை காட்டுக்கு அனுப்பினாள்.

உ.பியில் சமாஜ்வாதி தலைவர் முலாயமின் 2வது மனைவி சாதனா யாதவ், கைகேயி மாதிரி நல்லவளில்லை! அரசியல் ஆசை அளவற்று இருப்பவர். இதை பெட்ரோல் வீட்டு எரியவைக்க கூனியாக வந்து அமர்சிங் சிறப்பான பங்களிப்பை செது வருகிறார்.

உ.பி. கைகேயி சாதனா குப்தா கையில் முலாயம், தம்பி சிவபால் யாதவ், அமர்சிங், காயத்ரி பிரஜாபதி, ராக்கிஷோர் சிங் ஆகியோர். அகிலேஷ் யாதவ் ஒன்றும் ராமபிரான் கேரக்டர் அல்ல! ஆயினும், அவருக்கு ஆதரவு மாமா ராம்கோபால் யாதவ், வகுப்புத் தோழன் உத வீர் சிங்.

இந்த கேரக்டர்கள் எல்லாம் நமக்கு அவசியம் இல்லை! ஆனால், சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் நடக்கும் பூகம்பத்தால் அங்கு தமிழ்நாடு போல அரசே நடக்கவில்லை. பொதுசுகாதாரம் சீரழிந்து, டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா காச்சல் ஊர்முழுதும் பரவிக் கிடக்கிறது.

அரசின் செயலற்ற தன்மையை உச்ச நீதிமன்றம் ‘குட்டுவைத்து’ சுட்டிக் காட்டியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமான சோத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி முலாயம் தலைமேல் சிபிஐ கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது! முலாயமை பெரிதும் நம்பியுள்ள முஸ்லிம் பெருமக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என குழம்பிப் போ உள்ளனர்.

இந்த நிலையில், அத்தனை மைனாரிட்டி ஓட்டும் தனக்குத்தான் போட வேண்டும் என அழைப்பு மேல் அழைப்பு விட்டு மாயாவதி காத்திருக்கிறார்.

30 நாள் நடை பயணம் போனாலும், தன் கட்சிக்குள் இருப்பவர்களையே தக்கவைத்துக் கொள்ள முடியாமல், ரீட்டா பகுகுணா போன்ற பலரை இழந்து நிற்கிறது காங்கிரஸ்.

ஓடுமீன் ஓட உறுமீனுக்காக காத்திருக்கிறது பாஜக. ‘ஜெ ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை துவக்கிவிட்டார்!

உ.பி.யில் முலாயம் சிங் நிலைமை எனக்கு ஒன்றைதான் நினைவுறுத்துகிறது. கலியுகத்தில் அவனவன் செத பாவத்தை அவன் வாழ்நாளுக்குள்ளேயே அனுபவித்து ஆக வேண்டுமாம்!

1990 அக்டோபர் 30ல் அயோத்தி ராமபிரானுக்கு ஆலயம் கட்ட வந்த 16 கரசேவகர்களை சுட்டுக் கொன்றவர் முலாயம் சிங். பின்னாளிலே நாடாளுமன்றத்தில் அதை நியாயப்படுத்தி ‘பாபர் மசூதியை காக்க இன்னும் எத்தனை பேரையும் சுடத் தயார்’ என கொக்கரித்தவர் முலாயம்!

ராமர் கோயில் கட்டுவதை தடுத்த பாவம் எங்கே போகும்? கர சேவகர்களை கொன்று குவித்த பாவம் எங்கே போகும்?

முலாயம் குடும்பத்து கைகேயி சாதானாவும் சகுனி அமர்சிங்கும் ராமர் காரியத்தை தடுத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக இறைவனால் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்!

அரசன் அன்று கொல்வான், தெவம் நின்று கொல்லும்

ராமபிரான் இன்று ‘கொன்று’ கொண்டிருக்கிறார்.