சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மோடி தமிழின் பெருமை குறித்து புகழ்ந்து பேசினார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
விழாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி தமிழ் மொழி. பாரதத்தின் மூத்த மொழி தமிழ். உலகின் மிகப் பழமை வாய்ந்த மொழியான தமிழை போற்றுவோம் இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசினார்.
மேலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி இளைஞர்களின் உத்வேகம் உற்சாகம் அளிக்கிறது என்றும் சாதித்த மாணவர்கள்களின் பெற்றோர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். அவர்களின் தியாகம் தான் உங்களை வளர்த்துள்ளது இளைஞர்களின் கண்ணில் ஒளியை காணமுடிகிறது. உங்களின் வெற்றியில் உங்கள் பெற்றோர்களின் உழைப்பு உள்ளது. உங்கள் சாதனைகளில் ஆசிரியர்கள் உள்ளனர் உங்கள் வெற்றியில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவர்களை நாம் தொடர்ந்து உற்சாகப்படுத்தும். ஒருவரின் வெற்றியில் பலரின் பங்களிப்பு உள்ளது எதிர்கால இந்தியாவின் கனவுகளை உங்களின் கண்களில் பார்க்கிறேன் என்றார்.