உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகிலுள்ள குஷிநகர் மாவட்டத்தில் மசூதியில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. அங்கு விரைந்து சென்ற மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் இன்வெர்ட்டர் பேட்டரி தான் வெடித்தது என்று முதலில் தெரிவித்தார்கள். அங்கு பணிபுரிந்த ஊழியர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் பல உண்மை தகவல்கள் வெளியில் வந்தது. அங்கு ஏற்கனவே பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மெளலான அஸிமுதின் அவனுடன் சேர்ந்த மூன்று பேரும் அந்த வெடிமருந்துகளை கொண்டு வந்து மசூதியில் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இவர்களை அந்த மசூதியில் வெடிமருந்துகளை பதுக்க அனுமதி கொடுத்தவர் அங்கு பணிபுரிந்த அஜிகுஃதுதின் என்பவராவார். இவரின் பேரன் அஷ்பக் ஆலமும் இவரின் மனைவியும் இந்திய ராணுவத்தில் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த குண்டு வெடிப்பு நடந்தபோது அஷ்பக் அந்த ஊரில்தான் அன்று இருந்திருக்கிறார். சம்பவம் நடந்த மசூதிக்கு சென்றதுடன் குண்டுவெடித்த இடங்களை சுத்தம் செய்து தடயங்களை அழிக்கவும் செய்திருக்கிறார்.இதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு பின் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.