அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்கள் இந்த வருட தீபாவளியை ‘சேவை தீபாவளியாக’ கொண்டாடியுள்ளனர். இதில் 1,33,000 கிலோவுக்கும் அதிகமான உணவு பொருட்கள் ஏழை எளியவர்களுக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹிந்துமத அமைப்புகள், யோகா மையங்கள், கலாச்சார அமைப்புகள் உள்ளிட்ட 179 அமைப்புகள் இந்த ‘சேவை தீபாவளியில்’ பங்கேற்றன. 26 மாகாணங்களில், இரண்டு மாதங்களாக இந்த உணவு தானம் நடைபெற்றது. இதை கனெக்டிகட் மாகாண சின்மயா மிஷன் தலைவர் வெங்கட்கதே தெரிவித்தார்.