பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவசர தேவையை கருத்தில் கொண்டு, ராணுவ துணை தளபதி தனக்கு உள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி 210 ஸ்பைக் ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளார்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படையை சேர்ந்த மிராஜ் 2000 விமானங்கள் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், இஸ்ரேலின் ஸ்பைக் ஏவுகணைகளை வாங்க ராணுவம் தயார் செய்தது. ஸ்பைக் ஏவுகணைகள் 4 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் பெற்றது. இந்தியா வாங்கியுள்ள ஏவுகணைகளின் மதிப்பு ரூ.280 கோடி என தெரிகிறது.
ராணுவ வட்டாரங்கள் கூறுகையில், டி.ஆர்.டி.ஓ., தயாரித்து வரும் , மனிதர்களால் பயன்படுத்தப்படும் டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் தயாராகா விட்டால், ஸ்பைக் ஏவுகணைகள் வாங்குவது தொடரும். ராணுவத்தின் முக்கிய நடவடிக்கைகள், டிஆர்டிஓ வால் தாமதப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன