இந்தியாவில் பல்வேறு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா, 5,350 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளதாக, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக்கழகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை மேம்படுத்தும் வகையில், டி.பி.சோலார் லிமிடெட்; சூரிய சக்தியை மேம்படுத்தும் வகையில், எஸ்.ஏ.ஈ.எல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்க அங்கூர் கேப்பிடல் பண்டு நிறுவனம்; இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க, ஜெனிசிஸ் பயாலஜிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த லீப் இந்தியா புட் அண்டு லாஜிஸ்டிக்ஸ்; பருவ நிலை மாற்றத்தை கண்டறிந்து, பருவநிலை தகவமைப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்காக, க்ளைம் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட். கிராமப்புற பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில், பஹல் பைனான்ஷியல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்; கிராமப்புற வீட்டுத்தேவை பிரச்னையை சமாளிக்க, உம்மீத் ஹவுசிங் பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பை ஊக்குவிக்க, அப்க்ரிட் எலக்ரிலீஸ் பிரைவேட் லிமிடெட்; பிளாஸ்டிக் மறுசுழற்சியை மேம்படுத்த டால்மியா பாலிப்ரோ
உணவு பாதுகாப்புக்காக சயின்ஸ் பார் சொசைட்டி டெக்னோ சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வகையில், இந்தியாவுக்கு, அமெரிக்கா 5,350 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கி, நாட்டின் முன்னேற்றதுக்கு உதவி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.