ஆங்கிலத்தில் நடாஷா ரத்தோர்
ஜெனி சார்ப் என்ற அமெரிக்க சிந்தனையாளர், பல நூல்களை எழுதியுள்ளார். வன்முறையின்றி ஜனநாயகரீதியில் ஒரு அரசை வீழ்த்துவதுதற்கு சுமார் 200 வழிமுறைகளை தன் நூல்களில் விவரித்துள்ளார்.
சமுக அமைதி, ஜனநாயகம் என்று பேசிக் கொண்டே அரசின் அடித்தளமாக இருக்கக்கூடிய அமைப்புகளை பலவீனப்படுத்தி அரசை செயல்பட முடியாமல் முடக்கி வீழ்த்துவது பற்றி அவர் விவரமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
அந்த வழிமுறைகளில் சில எகிப்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு அரசு வீழ்த்தப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் செயல் படுத்தப்பட்டன. 76 நாட்களில் ஹாங்காக் அலங்கோலமாக்கப் பட்டது.
தங்கள் நாட்டு போலீஸ், ராணுவத்தின் மீது கல்லெறிவது, அவர்கள் வரும் பாதையில் தடைகளை போடுவது, பாதைகளை அழிப்பது, வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் தீயிடுவது , அதற்கு முன்னால் தீயணைப்பு வண்டிகளை எறித்துவிடுவது, பெண்களையும் குழந்தைகளையும் போராட்டத்தில் முன்னணியில் நிற்கவைப்பது, ஆசிட் பாக்கெட்களை வீசுவது, பெட்ரோல் குண்டுகளை போடுவது, மீடியாக்களைப் பயன்படுத்தி எதிர்மறையான பிரச்சாரம் செய்வது, தவறான செய்திகளை பரப்புவது, மக்களைத் திசைதிருப்பி அரசுக்கு எதிராக்குவது என்று பல்வேறு யுக்திகளை அவரது நூல்கள் விவரிக்கின்றன.
இவற்றையெல்லாம் தில்லி கலவரத்தின்போது நடந்தவற்றுடன் நீங்கள் பொருத்திப் பார்க்கலாம். எல்லாம் மெத்தப் படித்தவர்களால் விவரம் தெரிந்தவர்களால் திட்டமிட்டரீதியில் தெரிந்தே செய்யப்பட்டன. அரசை வீழ்த்துவதற்காக ஜெனி சார்ப் கூறியுள்ள வழிமுறைகளில் 70-80 முறைகள் தில்லியில் செயல்படுத்திப் பார்க்கப் பட்டன.
தில்லி கலவரத்திற்கும் சி ஏ ஏ வுக்கும் சம்பந்தமில்லை. இதற்கும் முஸ்ஸீம்க ளுக்கும் சம்பந்தமில்லை. மதசார்பின்மை இங்கு கேள்விக்குள்ளாக்கவில்லை. பிரஞ்ச்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரிட்டீஷ்காரர்கள், முகலாயர்கள் தாக்குதலுக்கு பிறகும் இந்தியா உயிரோட்டத்துடன் இருக்கும்போது சில இந்துத்துவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் அழிந்தா போய்விடும்?
தேசம் கொள்ளையடிக்கப்பட்டு பல பத்தாண்டுகள் முன்றாம் உலகநாடுகள் வரிசையில் வைக்கப் பட்டிருந்தது. குடும்ப ஆட்சியும் ஊழலும் பலப்பல ஆண்டுகள் ஓங்கி வளர்ந்தன. படித்தவர்களும் விவரம் தெரிந்தவர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் மோடியை வீழ்த்த செய்யப்படும் அரசியல் விளையாட்டு க்கள் இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கும் மதசார்பின்மைக்கும் மிக அதிக கேடு விளைவிப்பதாக உள்ளன.
பல்லாண்டு காலமாக ஊழலையும் குடும்ப ஆட்சியையும் மீறி இந்தியா உயிர்தப்பி வாழும்போது, இவ்வளவு கடுமையாக மோடியை எதிர்க்க வேண்டிய காரணம் என்ன? மற்றவர்களைவிட மோடி சிறந்தவர் மேலானவர் என்பதாலா? இல்லை. சமுகத்தில் அடித்தட்டைச் சார்ந்தவர், பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் எவரும் வெற்றி பெறுவதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியா விலுள்ள 90% மக்கள்தொகை யினரை பிரதிநிதி செய்யும் வகையில் ஒரு தலைவ ரும் இதுவரை இந்தியா கண்டதில்லை. ஒரு டீக்கடைகாரர் சமுக – பொருளாதாரத்தில் கீழ்நிலையில் உள்ளவர், இந்திய பொதுமக்களை புரிந்து கொண்ட தலைவர் ஒருவரை இதுவரை இந்தியா கண்டதில்லை.
சட்டம் போட்டு இந்தியாவில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அதற்கு தேவை இயக்கமாக செயல்படுவது என்று மோடிக்கு புரிந்திருக்கிறது. இதுவரை இந்தியா வில் குறுகிய காலத்தில் அவர் கொண்டுவந்திருக்கும் வேகமாக மாற்றங்களும் சிக்கலான சூழ்நிலைகளையும் தடையாக நின்றவர்களையும் அவர் கையாண்ட விதம் மெச்சத்தக்கது.
இப்போது நமக்கு தெரிந்த ஒரேஒரு ஒட்டை அவர் எடுத்துள்ள கடுமையான பொருளாதார நடவடிக்கைகள். அவை உண்மையிலேயே வெற்றி பெறுமா, பலனலிக்குமா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும். கொரானா வைரஸ் பிரச்சனை க்கு பிறகு மீண்டெழும் பொருளாதாரம் எதுவென்றால் அது அநேகமாக இந்திய பொருளாதாரமாகதான் இருக்கும். காரணம் அதுதான் 90% சுயசார்பு கொண்டது.
அண்மையில், குஜராத்தில் உள்ள டாக்டர் சரத் தாக்கூரின் பேச்சை ஒலிநாடா வில் கேட்டேன். கொரானா பிரச்சனை க்கு சற்றே முன்பு அவர் மோடியுடன் பேசியிருந்ததைப் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் மோடி யைப் பார்த்து, எப்படி இருக்கின்றீர்கள்? இப்ப என்ன பண்ணிண்டு இருக்கின்றீர்கள்?, என்று கேட்டார். எல்லோரும் ‘ நல்லா இருக்கிறேன் ‘ என்றே சொல்வார்கள். ஆனால் மோடி, ஒரு கணம் டாக்டரைப் பார்த்துவிட்டு, ‘ இப்ப நானொரு சாதனா செய்து கொண்டிருக்கிறேன் ‘ எனறார். என்ன சாதனா என்று கேட்க, தூக்கத்தை கட்டுப்படுத்து வது எப்படி என்பதே அது, என்றார் மோடி.
டாக்டர் கேட்டார், ஏற்கனவே நீங்க கொஞ்ச நேரம்தான் தூங்குவதாக கேள்வி பட்டிருக்கிறேன். அதை இன்னும் குறைக்க வேண்டுமென்றால் எவ்வளவுதான் குறைப்பது? அதற்கு மோடி மிகவும் தீவிரமான உணர்வுடன், எனக்கு தூக்கமே வேண்டாம்’, என்றார். இதை படிக்கும் மக்கள் நம்ப மறுக்கலாம். ஆனால் டாக்டர் சரத் அதை பதிந்துள்ளார்.
மோடி சொன்னார், நான் இந்த சாதனா பற்றி தெரிந்து கொண்டு, செய்து வருகிறேன். இதன் மூலம் தூக்கத்தை ஜெயிக்க முடியும். அனுமான் தூக்கத்தை வென்றவர் என்று சொல்கிறார்கள்….என்று அந்த உரையாடல் தொடர்ந்தது.
‘ஆனால், உங்களுக்கு ஏன் இது? எதற்காக இந்த சாதனா? ‘ என்று டாக்டர் கேட்டார். ” இந்த நாட்டிற்காக. இதன் வறுமையை ஒழிப்பதற்காக. நாம் பல்லாண்டுகளாக கொள்ளையடிக்கப் பட்டுள்ளோம். நான் அதை சரி செய்ய விரும்புகிறேன். ஒரு நாளுக்கு இருபது மணிநேரம் என்பது குறைவு. 24 மணிநேரமும் எனக்குத் தேவைப் படுகிறது ” என்று மோடி சொன்ன போது அவர் கண்கள் தளும்பி இருந்தன. ஆனால் டாக்டர் கண்களில் கண்ணீரே வழிந்தது.
மோடி இமயமலை பகுதியில் இருந்த காலத்தைப் பற்றியும் அங்கு அவருக்கு கிடைத்த வழிகாட்டுதல் பற்றியும் பேச்சு திரும்பியது, சாமியாராக போன மோடி நாட்டுக்கு சேவை செய்ய திருப்பி அனுப்பட்டது பற்றி பேசினார்கள். உங்களைக் கொல்ல நிறைய பேர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். கொலைகாரர்களின் பட்டியலில் முதல் ஆள் நீங்கள்தான். உங்களுக்கு பயமாகயில்லையா? என்று டாக்டர் சரத் கேட்டார்.
அதற்கு, ‘ என் வாழ்க்கையின் நோக்கம் இந்த நாட்டிற்கு சேவை செய்வது. அதில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும் முன்பு என்னை யாரும் கொல்ல முடியாது. அந்த இலக்கை எட்டிய பிறகு என்னை யாரும் காப்பாற்ற முடியாது. நான் மரணத்தை நினைத்து பயப்படவில்லை. என் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றவே இங்கு வந்துள்ளேன், என்று மோடி சொன்னார்.
டாக்டர் சரத் சொல்கிறார், நான் யாரையும் கண்முடித்தனமாக பின்பற்றுவதில்லை. ஒரு பானையை வாங்கும்போது கூட நாம் பலமுறை தட்டிச் சோதித்தே வாங்குவோம். இது பானை அல்ல, மனிதர். இவரை ஒருவரல்ல 130 கோடி மக்கள் சோதித்து பார்க்கிறார்கள். இவர் உறுதியாக இருக்கிறார். சிறந்த மனிதர்.
சீனாவில் ஹூபெய் மகாணத்தில் நடந்து வரும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் பற்றிய வீடியோக்களும் டீவிட்டர்களும் சீன அரசால் முடக்கப் படுகின்ற அதேநேரத்தில் தில்லியிலிருந்து விரட்டப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் களின் வீடியோக்களும் அரசு எதிர்ப்பு டீவிட்டர்களும் வலையுலகில் வெள்ளமென பெருகி வருகின்றன.
எதிர்கட்சியினர் சொல்வதுபோல் இது பாசிச அரசாக இருந்திருக்குமானால், இதைச் செய்ய உங்களுக்கு சுதந்திரம் இருந்திருக்குமா? பாசிசம்தான் மோடி அரசின் நோக்கமாக இருந்திருந்தால் இந்த ஆறாண்டுகளில் அது முழமையாக நடைமுறைக்கு வந்திருக்கும்.
உலகமெங்கும் மக்கள் அந்தந்த நாட்டு அரசை விமர்சிப்பதை பார்க்கலாம். ஆனால் இந்தியா வில் இருப்பதோ முற்றிலும் வேறுதளத்தில் ,இங்கு இது மிகவும் கீழான நிலையில் உள்ளது.
இங்கு தேச நலனை விட மோடி எதிர்ப்பு மேலோங்கி உள்ளது. மோடியை வீழ்த்த இவர்கள் எதையும் செய்வார்கள். எல்லாவற்றையும் செய்வார்கள். மக்கள் உயிர் பலியானாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்கள் அரக்கர்கள்.
இன்று இருக்கும் நிலையைப் பார்க்கும் போது தேசியவாதி யாக இருப்பதென்றால் என்னவென்று எனக்கு புரிகிறது. யார் உண்மையில் தேசவிரோதிகள் என்பதும் தெளிவாகிறது.
தமிழில் — திருநின்றவூர் இரவிக்குமார்