இந்தியாவின் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ் பணிகள் நடைபெறுவதாகவும், நரேந்திர மோடி பிரதமரான பிறகு 13,584 கிளைகள் (ஷாகா) அதிகரித்துள்ளதாகவும் ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா தெரிவித்துள்ளார்.
1925-ம் ஆண்டு டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாரால் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்) தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு சந்தித்த நெருக்கடிகளால் அரசியல்ரீதியாக ஆதரவு தேவை என்பதற்காக 1951-ல் அன்றைய ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வால்கர் வேண்டு கோளின்படி பாரதிய ஜன சங்கம் என்ற அரசியல் கட்சி தொடங் கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்பட்ட ஜனசங்கம், 1980-ல் பாரதிய ஜனதா கட்சியாக மாறியது. ஆர்எஸ்எஸ்ஸின் அரசியல் பிரிவான பாஜகவுக்கு தேசிய அமைப்பு பொதுச் செயலாளர், மாநில அமைப்பு பொதுச் செயலா ளர் போன்ற முக்கியப் பொறுப்பு களுக்கு ஆர்எஸ்எஸ் தனது முழு நேர ஊழியர்களையே நியமிக் கிறது. தற்போது தேசிய அமைப்பு பொதுச் செயலாளராக ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர் பி.எல்.சந்தோஷ் உள்ளார்.
நாடு முழுவதும் 90 சதவீத பகுதிகளில் ஆர்எஸ்எஸ்ஸின் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2009-ல் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சியை இழந்ததும் ஆர்எஸ்எஸ்ஸின் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டது.
அதன் பலனாக 2009 முதல் 2014 வரை 6 ஆண்டுகளில் 6,000 கிளைகள் அதிகரித்துள்ளன. ஷாகா என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கிளையாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் ஒரு மணி நேரம் நடக்கும் பயிற்சி வகுப்பாகும். ஷாகாவில் 40 நிமிடங்கள் உடற்பயிற்சியும், 20 நிமிடங்கள், கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உரையாடலும் இருக்கும்.
2014-ம் ஆண்டு முதல் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி (2019) வரை 13,584 கிளைகள் அதாவது கடந்த 10 ஆண்டுகளில் 19,584 கிளைகள் அதிகரித்துள்ளன. தற்போது நாடு முழுவதும் 57,411 கிளைகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர 18,923 வாராந்திர கூடுதல் களும் நடந்து வருகின்றன. தமிழகத் தில் வட தமிழ்நாடு, தென் தமிழ் நாடு என இரு மாநிலப் பிரிவுகளாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வரு கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத் தில் 1,200 கிளைகள் நடந்து வருகின்றன.
மாணவர்கள், இளைஞர்கள் என 20 வயதுக்கு உட்பட்டோர் வரும் கிளைகளின் எண்ணிக்கை 60 சதவீதம், 20 முதல் 40 வயது வரை உள்ளோர் வரும் கிளைகளின் எண்ணிக்கை 29 சதவீதம், 40 வயதுக்கு மேற்பட்டோர் வரும் கிளைகளின் எண்ணிக்கை 11 சதவீதம் ஆகும்.
இணையதளம் மூலம் ஆர்எஸ்எஸ்ஸில் இணைவோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்து வருவதாகவும், கடந்த 2018-ல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரும், இந்த ஆண்டு செப்டம்பர் வரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேரும் இணையதளம் மூலம் ஆர்எஸ் எஸ்ஸில் இணைந்துள்ளனர்.இவ்வாறு மன்மோகன் வைத்யா தெரிவித்தார்.