இதுதான் சகிப்புத்தன்மையா?

பாரதம் முழுவதும் ஹோலிப் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் எந்த பண்டிகையும் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஹிந்துக்களும் ஹோலியைக் கொண்டாடினர். வண்ணங்கள் கலந்த தண்ணீர், வண்ணப்பொடிகள் இசையுடன் ஹோலி விளையாடினர். இந்த ஹோலி கொண்டாட்டத்தை கெடுக்கும் விதமாக அம்ரோஹாவில் உள்ள முஸ்லிம்கள் திடீரென கற்களை வீசித் தாக்கினர். அந்த முஸ்லீம் வன்முறை கும்பல் பல்வேறு வீடுகளின் மேல் மாடிகளில் கூடி அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கற்கள் உள்ளிட்ட பல பொருட்களை வீசியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு மட்டும் அம்ரோஹாவில் திடீரென ஏன் இந்த வன்முறை நடந்தது? இந்த கல் வீச்சுக்கு கர்நாடக ஹிஜாப் விவகாரம் காரணமா அல்லது தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் ஏற்படுத்திய விளைவா எனசில சமூக ஊடக பயனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.