இங்கிலாந்தின் இறுமாப்பு உடைக்கப்பட்டது

பரதத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீரித்தபோதிலும், அதனை நம் நாட்டவர்கள் இரண்டு டோஸ்கள் செலுத்தி இருந்தாலும் இங்கிலாந்து செல்லும் நம் நாட்டவர்கள் 10 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது பாரதம். ஆனால், இறங்கிவர மறுத்த இங்கிலாந்திற்கு பதிலடியாக, இனி பாரதம் வரும் இங்கிலாந்து பயணிகள் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை காரணம் காட்டி ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து தெரிவித்தது. அதற்கு பதிலடியாக, இங்கிலாந்தில் 2022 ஜூலையில் நடைபெறும் காமன்வெல்த் ஹாக்கி போட்டியில் இருந்து விலகுவதாக பாரதம் அறிவித்தது. இறுதியாக நமது பாரதத்தின் தொடர்ச்சியான பதிலடிகளுக்கு இங்கிலாந்து பணிந்தது. வரும் அக்டோபர் 11ம் தேதி முதல், பாரதத்தில் இருந்து இங்கிலாந்து செல்லும் பயணிகள் கோவிஷீல்ட் இரு டோஸ் அல்லது வேறு எந்த கரோனா தடுப்பூசி இரு டோஸ் செலுத்தி இருந்தாலும் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை, விமான நிலையத்திலும் எந்தவித பரிசோதனையும் செய்யத் தேவையில்லை என அறிவித்துள்ளது.