ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஹிந்து சமுதாயத்தின் தேசப்பற்று, கட்டுப்பாடு, தியாகம், தொண்டுள்ளம், ஒழுக்கம், இணைந்து செயல்படும் தன்மை ஆகிய உயரிய பண்புகளின் அடிப்படையில் ஒருங்கிணைத்து, பாரத நாட்டை உலக அரங்கில் எல்லாத் துறைகளிலும் தங்கச் சிகரத்தின் உச்சத்திற்கு எடுத்துச் செல்ல கடந்த 91 ஆண்டுகளாக பணிபுரிந்து, 92ம் ஆண்டில் காலடி பதிக்கிறது.
வின் எழுச்சியே தேசிய எழுச்சி; ஹிந்துவின் வீழ்ச்சியே தேசிய வீழ்ச்சி” என்பார் ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபகர் டாக்டர் கேசவர், நம் தேசத்தின் வீழ்ச்சிக்கு அவர் வேறு எவரையும் குறை கூறவில்லை.
பண்புகள் மலர பயிற்சி அவசியம், ஆர்.எஸ்.எஸ், தொண்டர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் பண்புப் பயிற்சிகள் ஆகும். சங்க ஸ்வயம்சேவகர்களின் அணிவகுப்பு ஊர்வலமும் பயிற்சியில் ஒரு அங்கம் ஆகும்.
துவக்க காலத்தில் சங்க அணி வகுப்பு ஊர்வலத்தில் சீருடை அணிந்த ஸ்வயம்சேவர்கள் கட்டுப்பாட்டுடன் விசிலுக்கு ஏற்றபடி நடந்த காட்சி கண்டு பொதுமக்களுக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
ஊர்வலத்தில் வாத்திய இசைக்கு ஏற்றாற்போல் நடைபயிற்சி பழகிட ஸ்வயம்சேவகர்கள் விரும்பினர், சங்க ஸ்வயம்சேவகர்கள் தம்மிடம் குறைந்த பட்சம் ஒரு ‘சங்கா’ (Bugle) வாத்தியம் இருக்கவேண்டும் என்று விரும்பினர். இதற்காக பள்ளி மாணவர்களாக இருந்த ஸ்வயம்சேவகர்கள் பைசாவாக சேமிக்கத் துவங்கினர்.
அந்நாட்களில் நாகபுரியில் ஒரு வீட்டில் கோகுலாஷ்டமி தருணத்தில் ஏழு நாட்கள் தட்சிணையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. அங்கு சங்கத்தின் இளைஞர்கள் செல்வதென முடிவு செய்தனர். அதற்காக 6கி.மீ. தூரம் நடக்க வேண்டிவந்தது.
அந்த சிரமத்தை பொருட்படுத்தாமல், ஆனந்தமாக ஸ்வயம்சேவகர்கள் அங்கு சென்று வந்தனர். அவர்கள் நோக்கம், அதன் மூலம் நிதி சேகரித்து குறைந்தபட்சம் ஒரு ‘சங்கா’ வாங்க வேண்டும் என்பதே.
இம் முயற்சியில் பாபாசாகேப் ஆப்டே, தாதாராவ் பரமார்த் (தமிழகத்தில் சங்கப்பணிக்கு வித்தூன்றியவர்) பாளாசாகேப் தேவரஸ் (ஆர்.எஸ்.எஸ் மூன்றாவது சர்சங்கசாலக்), கிருஷ்ணராவ் மொகரீர் ஆகியோர் ஈடுபட்டனர்.
சங்கத்தின் முதல் இசை வாத்தியம் ‘சங்கா’ வாங்கப்பட்டது. ‘சங்கா’ வாசித்து கம்பீரமான இசை முழக்கம் கேட்ட ஸ்வயம்சேவகர்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.
நாலா திசைகளிலும் சங்க வாத்திய இசை (கோஷ்) முழக்கம் சங்க ஸ்வயம்சேவகர்களுடைய தியாகம், ஈடுபாடு, கடின உழைப்பு ஆகியவற்றை பிரகடனம் செய்தவாறு, சமுதாயத்தில் பராக்ரம உணர்வினைத் தட்டி எழுப்பியது.
சங்கம் விஜயதசமித் திருநாளில் துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சங்கம் உதித்த அந்த நன்னாளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் வளர்ச்சி காட்டி எல்லையைத் தாண்டும் விழாவாக விஜயதசமித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சங்கம் துவங்கி 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1928ம் ஆண்டு அக்டோபர் 23ம் நாள் நாகபுரியில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. டாக்டர்ஜி ஹிந்து சமுதாயத்தில் வீரவிரதம் பூண்ட இளைஞர்களை உருவாக்கிடும் நோக்குடன் சங்க ஸ்வயம்சேவகர்களின் கோஷ் வாத்தியங்களுடன் கூடிய அணி வகுப்பு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட 500 – 600 ஸ்வயம்சேவகர்கள் சங்க சீருடையில் அணிவகுப்பில் பங்கு பெற்றனர். சர்தார் வல்லபாய் படேலின் அண்ணா, தேசத்தலைவர்களுள் ஒருவரான ஸ்ரீவிட்டல்பாய் படேல் அவர்களை டாக்டர்ஜி விஜயதசமி விழாவில் பங்கு பெற அழைப்பு விடுத்தார். அழைப்பினை ஏற்றுக்கொண்டு சீருடை அணிந்த சங்க ஸ்வயம்சேவகர்களின் கட்டுப்பாடு நிறைந்த அணிவகுப்பு ஊர்வலத்தைப் பார்வையிட்ட ஸ்ரீ விட்டல்பாய் படேல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார், சங்கப்பணிக்கு ஆசி அளித்தார்.
அந்த ஆண்டிலிருந்து விஜய தசமி விழாவை ஒட்டி சங்க ஸ்வயம்சேவகர்களின் சீருடையுடன் கூடிய அணிவகுப்பு ஊர்வலம் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.
வர்தாவில் 1934ம் ஆண்டு நடைபெற்ற சங்கத்தின் குளிர்கால முகாமில் 1,500 ஸ்வயம்சேவகர்கள் பங்கு பெற்றார்கள். முகாம் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே மகாத்மா காந்தியடிகளுடைய சத்யாக்ரக ஆசிரமம் இருந்தது.
முகாமில் சங்க சீருடை அணிந்த ஸ்வயம்சேவகர்களின் நிகழ்ச்சி துவங்கியது. சங்க ஆசை வாத்தியங்களின் கர்ஜனையும் கேட்டது. முகாமின் நிகழ்ச்சிகளைக் கண்டு காந்திஜி வியந்தார். வர்தா ஜில்லா சங்கசாலக் ஸ்ரீ அப்பாஜி ஜோதி நேரே சென்று காந்தியடிகளை முகாம் பார்வையிட வருமாறு அழைத்தார். 1934 டிசம்பர் 25, அன்று காந்திஜி காலை 6 மணிக்கே முகாமிற்கு வந்தார்.
முகாமின் அனைத்து ஸ்வயம்சேவகர்களும் காந்தியடிகளுக்கு சங்க முறைப்படி அணிவகுப்பு மரியாதை செய்தனர். அப்பாஜியின் தோள்களில் கை வைத்துக் கொண்டு அவர் பேசும்போது, நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இத்தகைய பிரமிக்க வைக்கும் காட்சியின் நான் இதுவரை எங்கும் கண்டதில்லை” என்றார்.
முகாம் நிறைவு நிகழ்ச்சிக்குப்பிறகு டாக்டர்ஜி காந்தியடிகளை சந்திப்பதற்காக சேவா ஆசிரமத்திற்கு சென்றார். அவர்கள் இருவர் நிறைந்த நிகழ்வு. காந்தியடிகள், டாக்டர், தங்கள் முகாமில் பங்கு பெற்ற ஸ்வயம்சேவகர்களின் எண்ணிக்கை, அவர்களது கட்டுப்பாடு, பண்புகள், தூய்மை, தீண்டாமை இன்மை ஆகிய ஏராளமான விஷயங்கள் கண்ட எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்களுடைய கோஷ் வாத்திய இசை என்னை மிகவும் கவர்ந்தது” என்றார்.
உரையாடலுக்குப் பிறகு காந்தியடிகள் டாக்டர்ஜியை வழியனுப்புவதற்காக ஆசிரமத்தின் வாயில் வரை வந்தார். அவருக்கு விடையளிக்கும் போது டாக்டர்ஜி, தங்களுடைய நல்லொழுக்கம், சங்கப்பணியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இவற்றின் பலத்தில் தாங்கள் ஏற்றுக்கொண்ட பணியில் தங்களுக்கு வெற்றி நிச்சயம்”என்று ஆசி வழங்கினார்.
1962ம் ஆண்டு சீனா நம் நாட்டின் மீது படையெடுத்து ஆக்ரமித்தபோது, சங்க ஸ்வயம்சேவகர்கள் பொதுவாக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டினர். குறிப்பாக நம் ராணுவ வீரர்களுக்கு உதவியாக இருந்தனர்.
எனவே பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு சீன ஆக்ரமிப்பின்போது சங்க ஸ்வயம்சேவகர்களின் தியாகமயமான பங்களிப்பைப் பாராட்டி 1963 ஜனவரி அன்று தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் சங்க ஸ்வயம்சேவகர்களை பங்கு பெற அழைப்பு விடுத்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும் சீருடை அணிந்த சங்க ஸ்வயம்சேவகர்கள் 3,000 பேர் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனர். கோஷ் வாத்தியத்துடன் ஸ்வயம்சேவகர்களுடைய மிடுக்கான அணிவகுப்பு அனைவருடைய பாராட்டையும் பெற்றது.
சங்க ஸ்வயம்சேவகர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது கண்ட சில காங்கிரஸ் பிரமுகர்கள் தமது புருவங்களை நெறித்தனர். அவர்களது எதிர்ப்புகளை பண்டிட் நேரு பொருட்படுத்தவில்லை.
தேசபக்தி நிறைந்த பிரஜைகள் எனும் முறையில் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கு பெற அழைக்கப்பட்டனர்” என பிரதமர் நேரு தனது கட்சிக்காரர்களுக்கு பதில் அளித்தார்.
தேசப்பற்றை ஓங்கச் செய்யும் சங்க அணிவகுப்பு ஊர்வலம் தமிழகம் தவிர எல்லா மாநிலங்களிலும் எந்தத் தடங்கலுமின்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சங்க ஸ்வயம்சேவகர்களுடைய அணிவகுப்பு ஊர்வலத்ததிற்கு மாநில அரசாங்கம் அதிக தொந்தரவுகள் தருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சங்க அணிவகுப்பு ஊர்வலத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.
கடந்த ஆண்டு நீதிமன்றம் அனுமதி பெற்று தமிழகத்தில் இரண்டு இடங்களில் மட்டும் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ஆண்டும் அரசு அனுமதி அளிக்கவில்லை. நீதிமன்ற ஆணை பெற்று 2016 நவம்பர் 13, அன்று அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற உள்ளது.
நாடு அடிமைப்பட்டிருந்த நாளில், ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கிக் கொள்ளும் எண்ணத்தோடு, அமைப்பு ரீதியாக பணி புரிவதில் ஈடுபட்டுள்ள ஹிந்து சமுதாயத்தினரைத் தடுத்து நிறுத்துவதற்கே முயற்சி செய்தார்கள். ஹிந்துக்களின் மத நம்பிக்கைச் சிதைத்து எப்போதும் அவர்களை அடிமையாக்கும் எண்ணத்திலேயே இவையெல்லாவற்றையும் செய்து வந்தனர். இதில் வியப்பேதும் இல்லை.
ஆனால் நம் நாடு விடுதலை அடைந்த பிறகும் கூட ஹிந்துக்கள் அமைப்பு ரீதியாக விழா கொண்டாடுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்பது விசித்திரமான விஷயம்.
ஹிந்து அமைப்பினர் மீது தாக்குதலிலும், அடிதடியும் கொலையும் தீ வைப்புகளும் நடைபெறுகின்றன. இதற்கு பொறுப்பானவர்களையும் அக்கிரமும் செய்தவர்களையும் தடுப்பதற்கோ, பிடித்துத் தண்டனை கொடுப்பதற்கோ எந்தவித முயற்சியும் செய்யப்படுவதில்லை. அமைதியும், நியாயமும் கொண்டு நடப்பவர்கள் தான் அரசின் ஒரு தரப்பான செயல்பாடுகளுக்கு வேட்டைப் பொருளாகின்றன.
நல்லவரையும் குற்றவாளியையும் ஒரே தராசில் எடை போடுகிறார்கள். இது சமூக விரோதிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது.
தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம். தமிழகம் என்றும் தெய்வீகத்தின் பக்கம். தமிழக அரசுக் கட்டிலில் இருப்போர் வாக்கு வங்கிக் கணக்கில் குறியாக இருக்கின்றனர்.
ஒருங்கிணைந்த ஹிந்து சக்தியின் எழுச்சியின் முன்னர் இந்த வாக்கு வங்கி கணக்கு செல்லாக் காசாகிடும் நாள் தொலைவில் இல்லை