நெல்லை, பெருங்குளத்தில் பிறந்தவர் பெ. நா அப்புசாமி. இவர் தொழிலால் வழக்கறிஞர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருத்த்தில் புலமை கொண்டிருந்தார். அறிவியல், இசை, கவிதைகள், மொழி பெயர்ப்பு என தமிழுக்காக 70 ஆண்டுகள் தொண்டாற்றினார். தனது இறுதி மூச்சு அடங்கும் அன்று கூட இவர் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிவிட்டே மறைந்தார்.
அறிவியல் நூல்கள், பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். ‘பேனா’ என்ற புனைப்பெயரில் பல நூல்களை எழுதி உள்ளார். 25 அறிவியல் நூல்களை மொழிபெயர்த்துள்ளார். பல இசை விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் இதழான தமிழ்நேசனில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். மதுரை பல்கலைக் கழகத்தில், தமிழ்ப்பேரவைச் செம்மல் எனும் பட்டம் பெற்றுள்ளார். பெ. நா அப்புசாமியின் பிறந்த தினம் இன்று.