அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை உள்ளது

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றார். குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் 4 கிராமங்களுக்குச் செல்வதுடன் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை பார்வையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆதர்ச கிராம திட்டத்தின் கீழ் இந்த 4 கிராமங்களை ஜெய்சங்கர் தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா என்பது, ஜனநாயகத் திருவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு சிரந்த விஷயம். இதில் சர்ச்சையை உருவாக்கக் கூடாது. ஆனால், இது தேவையில்லாமல் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. சிலர் இதை வேண்டுமென்றே சர்ச்சைக்குரியதாக ஆக்க முயல்கிறார்கள். ஆனால், அரசியல் செய்வதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒட்டுமொத்த நாடும் இணைந்து இதனை திருவிழாவாகக் கொண்டாட வேண்டும்” என்று தெரிவித்தார்.