நேற்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு இன்று (ஜன.23) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து அயோத்திக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒரே நாளில் அயோத்தி விமான நிலையத்துக்கு பல்வே று இடங்களில் இருந்து 100 தனி விமானங்களில் விஐபிகள் ‛‛விசிட்” செய்துள்ளனர்.
ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ராமர் சிலையின் வைர கிரீடம் மதிப்பு ரூ. 11 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிரீடத்தை குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ஒருவர் அன்பளிப்பாக வழங்கி உள்ளார். கையில் இருக்கும் வில்லும், அம்பும் முழு தங்கத்தாலானவை. ராமர் சிலை முழுவதும் தங்கம், வைரம், வைடூரியம் என ஜொலிக்கிறது. அயோத்தியில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமர் சிலை. மூலவரான இவர் கருவறையில் உள்ளார் . ராமர் சிலைக்கு பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து பூஜை நடத்தினார்.
பக்தர்கள் வர அனுமதிக்கப்படுவதை முன்னிட்டு முதல் நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் சிரமப்பட்டனர்.