கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவரவேண்டும், கள்ள நோட்டுகளை அப்புறப்படுத்தவேண்டும், பயங்கரவாதத்துக்கு போகும் பணத்தை முடக்கிப்போட வேண்டும். இதுதான் நவம்பர் 8 அன்று 500, 1000 ரூபாய் நோட்டுகளை பாரத அரசு செல்லாதது ஆக்கி அறிவித்ததன் நோக்கம். அந்த நோக்கம் மெல்ல மெல்ல நிறைவேறி வருகிறது. இது பொறுக்காத சக்திகள் ‘ஆஹா பாமர மக்கள் தங்கள் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க கால்கடுக்க நிற்கிறார்களே?’ என்று திசைதிருப்பும் பிரச்சாரம் நடத்திப் பார்த்தன. பாரத குடிமகனோ பாரத அரசின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு பொறுமை காத்தார். அதன் விளைவாக முடக்கப்பட்டிருந்த மக்கள் பணம் மக்கள் கைக்கு திரும்பும் தருணம் வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேசத்தையே பணம் சாராத பொருளாதாரத்திற்கு இட்டுச் செல்லும் டிஜிட்டல் முயற்சி அபார வேகம் எடுத்துள்ளது. சாமானிய மக்கள் தாங்கள் ரொக்கம் இல்லாமல் வாழ்க்கை நடத்தும் அனுபவத்தை இங்கே விவரிக்கிறார்கள்.
சென்னை தி.நகர் வாசியான வித்யா கூறுகிறார்: மளிகைக் கடைக்கு போனேன். 181 ரூபாய்க்கு பொருள் வாங்கினேன். கையில் 2000 ரூபாய் நோட்டு இருந்தது. மளிகைக் கடைக்காரரிடம் சில்லரை இல்லை. கடன் அட்டையின் மூலம் பணம் செலுத்தலாமா என்று தயக்கத்துடன் கேட்டேன். சரி என்றார். மிகக் குறைந்த தொகை ஆயிற்றே என்பதுதான் என் தயக்கத்துக்கு காரணம். கடன் அட்டையைத் தேய்த்தேன். உரிய தொகையை செலுத்தினேன். மளிகைக் கடைக்காரருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை நன்றாகப் புரிந்திருக்கிறது என்று எனக்குப் புரிந்தது. அடுத்த வாரம் அதே போல பொருள்களை வாங்கிய பின்தான் தெரிந்தது, என் பையில் கடன் அட்டை இல்லை என்பது. கடைக்காரரிடம் சொன்னேன். பொருள்களை வீட்டில் டெலிவரி கொடுக்கும்போது வசூல் செய்துகொள்கிறேன் என்றார். வீட்டுக்கு வந்த டெலிவரி பையன், அட்டை தேய்க்கும் மிஷினையும் கொண்டுவந்திருந்தான். எனக்கு ஒரே ஆச்சரியம். டிஜிட்டல் யுகம் வீட்டு வாசல் தாண்டி என் வீட்டுக்குள்ளேயே பிரவேசித்துவிட்டதே!
எழுத்தாளர் காந்தாமணி நாராயணன் அனுபவம் இது: சென்ற வாரம் சில பொருட்கள் வாங்கும் அவசியம் ஏற்பட்டது. முதல் இரண்டு கடைகளில் பணம் கொடுத்துப் பொருட்கள் வாங்கினேன். அன்று மருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ரூபாய் 300க்குத் தான் மருந்துகள் வாங்கினேன். கொண்டு வந்த பணம் குறைந்து கொண்டு வருகிறதே என்று மனதில் ஒரு நெருடல். இருந்தும் அந்த மருந்துக் கடையில் டெபிட் கார்டை ஏற்றுக் கொள்வார்களா என்று கேட்டேன். சரி என்றனர். கார்டை கொடுத்தேன். மெஷின் ஏற்றுக் கொண்டு விட்டது (சில ஆண்டுகளுக்கு முன் மிஷின் ஏற்றுக்கொள்ளவில்லை). அன்று தான் முதல் முறையாக வாங்கிய பொருளுக்கு கார்டை உபயோகித்தேன். அதன் பிறகு ஒரு ஹோட்டலிலும் உபயோகப்படுத்தினேன். இனி முடிந்த இடங்களில் கார்டை உபயோகிக்க வேண்டும் என முடிவு செய்தேன்.
திருச்சி பாஜக பிரமுகர் பூமாகுமாரி கூறுகிறார்: மாமா, அத்தைக்கு வயதாகி விட்டது. வீட்டிற்குப் பார்க்க போனபோது ஊருக்கு கிளம்புகிறோம் என்று எந்த படபடப்பும் இல்லாமல் சொன்னார்கள். டிக்கெட்டிற்கு காத்துக் கிடக்க வேண்டுமே, சரியான சில்லரை, மறக்காமல் ஐஈ கணூணிணிஞூ எல்லாம் எடுத்துப்போக வேண்டுமே என அடுக்கினேன். அதெல்லாம் இருந்த இடத்திலிருந்தே முடித்து விட்டோம். எல்லாம் ரோஹித் புண்ணியத்தில் என்றார்கள். இது என்ன மாயம்! என்றேன். மாமா ஐகடணிணஞுஐ எடுத்து இதுதான் அந்த கல்பதரு என்றார். புரியவில்லை. க்கூகு மொபைல் டிக்கெட் பற்றியும் ஐகீஇகூஇயின் ஆண்ட்ராய்டு, ஐˆகு, விண்டோஸ் தொலைபேசிக்கான அணீணீ பற்றியும் அவர் விளக்கியபோது எனக்கே ஆச்சரியமாகி விட் டது.
அண்ணாச்சி ஆசிரியர் ஆகிறார்: இப்படித்தான் இரண்டு வாரங்களுக்கு முன்னால் இந்த ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பாடு உச்சத்தில் இருந்த போதும் எங்கள் தெரு முக்கில் உள்ள அண்ணாச்சி கடையில் புதிதான ஒரு விஷயம் கற்றுக்கொண்டேன். கச்தூணாட் வசதி பற்றி அண்ணாச்சில் எல்லோருக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு மளிகைக் கடைக்காரர் என்ன செய்ய வேண்டும் என வினவினேன். கச்தூணாட்ல் கடைக்காரர் தனது மொபைல் எண்ணை வைத்து கையெழுத்திட வேண்டும். சுருக்கமாக தொழில் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்தால், கச்தூணாட் கிகீ இணிஞீஞுஐ உற்பத்தி செய்து கொள்ளலாம். பிரிண்ட் அவுட் எடுத்து, கிகீ இணிஞீஞுஐ கவுண்ட்டரில் ஒட்டி விட்டால் பேமெண்டுகள் பெற வசதியாகிவிடும் என்றார். இத்தனை எளிதானதா?
சாத்தூர் தாலுகா நென்மேனி கிராமத்தில் கோழிக்கறிக் கடைக்காரர் ரகுநாத் அனுபவம் இது: நோட்டு தட்டுப்பாடு வந்ததுமே வாடிக்கையாளர்கள் வசதிக்காக ஒரு அட்டை தேய்க்கும் மிஷின் (கணிகு) கொண்டுவந்து கடையில் வைத்தார். வாடிக்கையாளர்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்கிறார் இவர். ஒருவர் 100 ரூபாய்க்கு கறி வாங்கினால் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலிக்கிறேன். மக்களும் இதை பொருட்படுத்துவதில்லை. மணிக்கணக்கில் ஏடிஎம் வாசலில் நிற்பதைவிட இது பரவாயில்லை என்கிறார்கள்.
வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம் சீக்கராஜபுரம் மக்கள் அனுபவம் இது: 47 வயது ஜெயந்தியின் இரண்டு பிள்ளைகளும் தனக்கு இன்டர்நெட் பாங்கிங், மொபைல் பாங்கிங் ஆகிய நுட்பங்களை சொல்லித்தந்திருப்பதாக கூறுகிறார். பிள்ளைகளின் டிஜிட்டல் நடவடிக்கைகளை கண்காணிக்க இது தனக்கு கைகொடுக்கிறது என்கிறார் அவர். காய்கறிக் கடைக்காரர் வெங்கடேசன் (வயது 45) கடன் அட்டைத் தேய்க்கும் ஒரு மிஷின் வாங்கியிருக்கிறார். இதனால் தன்னுடைய கொள்முதலும் விற்பனையும் சரிவர நடக்கும்படி பார்த்துக்கொள்ள முடிகிறது என்கிறார் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணம் பெறுகிறவர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஆனது. அது போல எரிவாயு மானியத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் ஆதார் அட்டை தேவைப்பட்டது. எனவே ஊர் பஞ்சாயத்து, ஆதார் அட்டை வழங்கும் முகாம்களை நடத்தி ஊரில் உள்ள 1200 குடும்பங்களுக்கும் ஆதார் அட்டை கிடைக்கச் செய்தது. இரண்டு மாதங்களாக இந்த ஊர் மக்கள் மொபைல் பேங்கிங் நுட்பத்தை அறிவதற்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். ஊரில் உள்ள 20 கடைகளிலும் ஸ்டேட் பாங்கின் ‘மெர்ச்சண்ட் படி’ என்ற ஆப், அதனுடன் அட்டை தேய்க்கும் மிஷின் ஆகியவை காட்சியளிக்கின்றன. கடன் அட்டை பயன்படுத்தி பொருள் வாங்க ஊர்மக்கள் பழகிவிட்டார்கள்.
கிராமம் கிராமமாக தேசம் முழுதும்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை அடுத்த வடகாம் மாவட்டம் லாநுரா என்ற கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு மின்னணு பணம் செலுத்தும் முறை தெரியும். நோட்டு இல்லை என்ற கவலை அங்கே இல்லை. சிஎஸ்சி நிறுவனமும் பாரத அரசின் என்ஐசி என்ற அமைப்பும் கூட்டாக அந்த ஊர் மக்களுக்கு பயிற்சி அளித்ததால் இந்த நிலை. மாநிலத்தின் ரொக்கமில்லா கிராமம் என்ற பெருமை இந்த ஊருக்கு கிடைத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் ரொக்கம் இல்லா கிராமமாக உருவாகியுள்ளது பட்ஜிரி என்ற ஊர். போபாலை அடுத்த இந்த சிற்றூரில் பேங்க் ஆஃப் பரோடா முயற்சியில் அனைவருக்கும் ஸ்மார்ட் போன் வாங்க கடன் வசதி அளிக்கப்பட்டது. ஊரில் எல்லா கடைகளுக்கும் இலவசமாக கடன் அட்டை தேய்க்கும் மிஷின் வழங்கப்பட்டது. அப்புறம் என்ன, மக்கள் நோட்டை எதிர்பாராமல் ஜாம்ஜாம் என்று காலம் தள்ளுகிறார்கள்.
ஆக, பாரத தேசம் ரொக்கம் இல்லா பொருளாதாரத்தில் மேளதாளத்துடன் அடியெடுத்து வைக்கிறது.
வேலையாள் சம்பளம் ‘ஜனதன்’னில்
ஆழ்வார் பேட்டையில் ஒரு அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. கிட்டத்தட்ட 16 வீடுகள். வங்கியில் பணம் எடுப்பதில் சிறிது சிரமம் என்பதால் அங்குள்ளவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக காசோலை தான் கொடுத்தனர். அந்த வேலையாட்கள் அனைவருக்கும் ஜன்தன் கணக்கு உண்டு. பணம் எடுக்க வங்கி படிவத்தையும் நிரப்பிக் கொடுத்தனர். தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு அதே போல் அடுக்குமாடியில் இருப்பவர்கள் மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும். அதையும் இந்த மாதம் முதல் காசோலையாகத்தான் கொடுப்போம் என கூறிவிட்டனர்.
வந்துவிட்டது டிஜி சந்தை
பத்து மாநிலங்களில் 250 சந்தைகள் ஞு‡அ– முன்னோடி திட்டத்தில். மேலும் 399 மண்டிகள் இணைக்கப்படுகின்றன. விவசாயியின் வருமானத்தைக் கூட்டுவதற்கான ஒரு வழிவகையே இந்த ஞு‡அ–. 46,688 வியாபாரிகள், 1,60,229 விவசாயிகள், 25,970 கமிஷன் ஏஜெண்டுகள் இதுவரை ஞு‡அ– தளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
அறிவியல் பூர்வமாக விவசாயியின் விளைபொருட்களின் தரம் சோதிக்கப்படும். விற்பனை முடிந்ததும் விவசாயியின் வங்கி கணக்கிற்கு பணம் நேரடியாகப் போய்ச் சேருமாறு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
நல்ல காலம் பொறக்குது!
* ரூ. 1000, ரூ. 500 நோட்டுகள் கிட்டத்தட்ட 86% ஆகிவிட்டது 2014ல். அப்போதே அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி அரசும் அப்படியே தொடர்ந்திருந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 30 லட்சம் கோடியாக அது உயர்ந்திருக்கும். அப்போது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்க முடியாது போயிருக்கும். பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும்.
* ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமான பணம் வங்கி அமைப்புகளுக்கு வெளியில் புழங்கியது. அதுதான் கருப்பு பணம். தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையால், 90% பெரிய ரூபாய் நோட்டுகள் வங்கி சிஸ்டமிற்குள் வந்துவிட்டது. இனிமேல் மெதுவாக இந்த 14 லட்சம் கோடியில் எவ்வளவு கருப்பு பணம், எவ்வளவு வரி விதிக்கலாம், என்றெல்லாம் யோசித்து அரசு முடிவெடுக்கும்.
* முத்ரா வங்கி தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே ரிசர்வ் வங்கி ‘ரூபாய் இல்லை’ என்று சொல்லி கடன் கொடுப்பதை சுருக்கிற்று. இனி அந்தப் பிரச்சினை வராதே! அபரிமிதமாக ரூபாய் குவிந்துள்ளது. முத்ரா முழு வீச்சில் இயங்கும்.
* 1.28 கோடி தொழிலாளர்கள் தான் அமைப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் உள்ளனர். மிச்சம் 12.8 கோடி பேர் அமைப்பு சாரா தொழில்களில் பணி செய்கின்றனர். அந்த சிறு, குறு நிறுவனங்கள் 60% வட்டியில் கடன் வாங்கி தொழில் நடத்தி வந்துள்ளது. வெகு சிரமப்பட்டது. இனி 16% அல்லது அதற்கும் குறைவான வட்டியில் கிடைக்கும் என்றால் இதன் வீச்சு புரியும்.
(த நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் எஸ். குருமூர்த்தியின் பேட்டியிலிருந்து)