அட்டகாசமான தீபாவளி பரிசு

செளதி அரேபியாவில் ஜி-20 நாடுகள் மாநாடு நடைபெறுவதையொட்டி 20 ரியால் கரன்சிகளை அந்த நாடு வெளியிட்டது. அதில் உள்ள உலக வரைப்படத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

இது சௌதி அரேபியா பாரதத்திற்கு அளித்த தீபாவளி பரிசு  என ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐ.நாவின் சாம்பல் பட்டியலில் உள்ள பாகிஸ்தான் பெயரை நீக்கும் வாக்கெடுப்பில் பாகிஸ்தானுக்கு எதிராக சௌதி ஓட்டளித்ததும் காஷ்மீர் பாரதத்துடன் இணைந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கும் பாகிஸ்தானின் முடிவை ஈரானும் சௌதியும் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.