ஜெட் குத்தகை தொடர்பாக மலேசிய அரசுக்கும் பாகிஸ்தான் விமான நிறுவனத்திற்கும் இடையே இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் விமான நிறுவனமான போயிங் 777 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பாகிஸ்தானிற்கு புறப்பட தயாராக இருந்தது. மலேசியா அரசு, பாகிஸ்தான் விமானத்தை பறிமுதல் செய்தது. அதில் பயணம் செய்ய இருந்த விமான பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என மலேசிய அரசு தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், மலேசிய அரசு ஒரு தலைபட்சமான நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக சீனா, அதிரடியாக பாகிஸ்தான் பயணிகள் சீனாவுக்கு வர இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.