விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 இடங்களில் 100 இடங்களில் வெற்றி பெற இலக்கு பா.ஜ.க. நிர்ணயித்துள்ளது பொதுவாக அமைதியை விரும்புபவர்கள் அசாம் மக்கள். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் வடகிழக்கு மாநிலங்களை கண்டுகொள்ளாமல் விட்டதால், அங்கு வன்முறை கலாச்சாரம் பெருகியது. அந்த மக்களை நேர் வழியில் திருப்ப ‘பக்தி இயக்கம்’ எனும் அமைப்பு பல வருடங்களாக முயற்சித்தது. இதனால் பலர் மனம் திரும்பினர். தற்போதைய மத்திய அரசும் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றது. அங்கு தற்போது நடைபெற்று வரும் முதல்வர் சர்பானந்த் சோனாவால் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், கலவரங்கள் நடைபெறுவதில்லை என்பதே இதற்கு சாட்சி. இந்த நிலையில் 100 இடங்கள் எனும் இலக்கு சாத்தியமே என கூறப்படுகிறது.