ஹிந்து உணர்வு இருக்க வேண்டாமா ?

சமீபத்தில் எனது நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன ஒரு தகவலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘‘எனது பெண் குழந்தை ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ௫ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள். கடந்த மாதம் நான் குடும்பத்துடன் திருப்பதி சென்று வந்தேன். எனது மகள் ஒரு லட்டு தனது ஆசிரியைக்கு கொடுக்கவேண்டும் என்று கேட்டு வாங்கி கொண்டு சென்றாள். எனது குழந்தை ரொம்ப ஆசையாக தான் திருப்பதி சென்று வந்ததைக் கூறி கொண்டு சென்ற லட்டை ஆசிரியையிடம் கொடுத்தாள். ஆனால் அந்த ஆசிரியை அதை வாங்க மறுத்துவிட்டார். காரணம் தான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றும், உங்கள் பிரசாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் தெரிவித்தார். குழந்தையின் முகமே வாடிவிட்டது. எனது குழந்தைக்கு மதம் என்பதெல்லாம் புரியாத வயது. இந்த சம்பவத்தை எனது நண்பர் என்னிடம் சொல்லி அங்கலாய்த்தார்.

ஒரு கிறிஸ்தவருக்கு அவர் மதத்தின் மீது பற்று அல்ல, வெறியே இருக்கிறது. ஹிந்துக்களாகிய நமக்கு ஹிந்து உணர்வு இருக்க வேண்டாமா?