நற்பணிக்குத் தலைவணங்கும் நாடு

பாரத ரத்னா நானாஜி

பாரத ரத்னா கொடுக்கிறார்களே நானாஜி என்பவருக்கு, யார் அவர்? எதற்காக அவருக்கௌ

பாரத அரசு அவரை கௌரவிக்கணும் என்று விஷயம் தெரியாமலோ விஷமத்தனமாகவோ

கேட்கிற அனைவரின் கவனத்திற்கு:

அதோ தெருவில் காய்கறி கூவி விற்றுக் கொண்டே போகிறானே அந்த சிறுவன், யார் தெரியுமா? அவன் பெயர் சண்டிகாதாஸ். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. அந்த சிறுவனுக்கு படிப்பில் அவ்வளவு ஆர்வம்.  காய்கறி விற்று பாடநூல் வாங்கி படிக்கிறான்.

மகாராஷ்டிர மாநிலம் பர்பணி மாவட்டம் கடோலி  கிராமத்தில் 1916 அக்டோபர் 11 அன்று பிறந்த சண்டிகாதாஸ் பட்டப் படிப்புக்காக உத்தரப் பிரதேசம்  ஆக்ரா சென்றார்.

ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்த அவரும்  தீனத
யாள்   உபாத்யாயாவும் உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து ஒருங்கிணைப்பு பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார்கள்.

சண்டிகாதாஸ் அமிர்தா ராவ் தேஷ்முக் என்ற தன் பெயரை நானாஜி தேஷ்முக் என்று சுருக்கி வைத்துக் கொண்டார்.

மூன்றே ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர் நானாஜி  கோரக்பூர், சுற்று வட்டாரத்தில்  250 ஆர்எஸ்எஸ் கிளைகள் துவக்க இளைஞர்களுக்கு உந்துதல் கொடுத்தார்.

பின்னாளில் நானாஜி அரசியலில் இருந்து ஒதுங்கி கிராம முன்னேற்ற பணியில் எஞ்சிய வாழ்
நாளை ஈடுபடுத்திக் கொண்டாலும் 1951ல் அவருக்கு உத்தரப் பிரதேச பாரதிய ஜனசங்க அமைப்புச் செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

ஜன சங்கத்தின் கிளைகளை மாநிலம் நெடுக பரப்பி, திடப்படுத்தி 412 எம்எல்ஏக்கள் கொண்ட உ.பி சட்டமன்றத்தில் 100 ஜன சங்க எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையை உருவாக்கி காங்கிரசை கதிகலங்கச் செய்தார்.

டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி உயிர்த்
தியாகம் நடைபெற்ற பிறகு தீனதயாள் உபாத்
யாயா ஜன சங்கத்தின்  அகில பாரத பொதுச்செய
லாளர் ஆனபோது நானாஜி அகில பாரத அமைப்புச் செயலாளர் பொறுப்பேற்றார்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்தியபோது பட்னாவில் காங்
கிரஸ் அரசின் போலீஸ் ஜெ.பியின் தலையைக் குறி வைத்து தடியடி நடத்தியது. அருகிலிருந்த நானாஜி தன் கையால் அந்த தடியடியை தாங்கி ஜெ.பியின் உயிரைக் காப்பாற்றினார்.

1975 -77 ல் இந்திரா காந்தி  அரசு நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்து நாடு நெடுக எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைத்து ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை தடை செய்து சர்வாதிகார தாண்டவம் ஆடிய போது நானாஜி தலைமறைவு சுற்றுப்பயணம் செய்து லோக சங்கர்ஷ சமிதி  ( மக்கள் போராட்டக் குழு) வாயிலாக சர்வாதிகாரியிடமிருந்து தேசத்
தைக் கைப்பற்றும் எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தினார்.

1977ல் சர்வாதிகாரி தோற்கடிக்கப்பட்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி அமைந்தது. அமைச்சராகும் படி அரசு கேட்டுக் கொண்டது. பணிவுடன் அதை மறுத்ததார்  நானாஜி.

காலப்போக்கில் நானாஜி ராமபிரான் தங்கி
யிருந்து புனிதப்படுத்திய சித்ரகூடம் பகுதியில் கிராம வளர்ச்சி பல்கலைகழகம் நிறுவி அதன் வேந்தரானார்.

தீனதயாள்ஜி வகுத்த ஏகாத்ம மானவ தரிசனம் கருத்தை நடைமுறை வாழ்வில் கொண்டுவர ஆராய்ச்சி நடத்துவதற்காக தீனதயாள் ஆராய்ச்
சிக் கழகத்தை டெல்லியில் நிறுவினார். அந்த நிறுவனம் நூற்றுக்கணக்கான கிராமங்களில் நானாஜி  வகுத்த பாதையில் கிராம மக்களின் வாழ்வில் முன்னேற்றம் காணச் செய்து வருகிறது

ஜனாதிபதி நீலம் சஞ்சீவி ரெட்டி உள்ளிட்டோர் நானாஜியின் கிராம வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்த்து பாராட்டினார்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நானாஜியின் பணியை மனமுவந்து பாராட்டினார்.

தேசத்திற்கே முன்னோடியான வகையில் கிராம வளர்ச்சிப் பணியில் ஈடுபட்ட நானாஜிக்கு  அரசு பத்ம விபூஷண் அளித்து கௌரவித்தது.

அவரது அரிய சேவைக்காக நானாஜி ராஜ்யசபா உறுப்பினர் ஆக்கப்பட்டார்.

2010 பிப்ரவரி 27 அன்று 94 வயதில் நானாஜி காலமானார்.

வாழ்க்கையை அவர் சமுதாயத்திற்காக  –  -அரசி
யலுக்காக அல்ல – சமர்ப்பித்தது போலவே தனது மரணத்தையும் சமுதாயத்திற்காக   சமர்ப்பித்
தார்.  மரணத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே டெல்லி சேவை அமைப்பான  ‘ததீசி தேகதான சமிதி’யிடம் மரணத்திற்குப் பின் தன் உடலை மருத்துவ படிப்பு படிக்கும் இளைஞர்கள் உடற்கூறியல் கற்பதற்காக தானம் செய்வதாக உறுதிமொழி எழுதிக் கொடுத்ததுடன் தேசத்தின் எந்த ஒரு பகுதிக்கும் தனது உடலை கொண்டு செல்வதற்கு ஆகும் செலவிற்காக பத்தாயிரம் ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.

அவர்  சித்ரகூடத்தில் காலமான பின், உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.