ஹலால் நீக்கம்

வணிக அமைச்சகத்தின் கீழ் வரும் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான (APEDA) அதன் கையேட்டில் இருந்து மாட்டிறைச்சிக்கான குறிப்புகளில் உள்ள ‘ஹலால்’ குறிப்புகளை நீக்கியுள்ளது. ஹலால் என்பது முஸ்லிம் மதப்படி விலங்குகளை கொல்லும் ஒரு கொடூர நடைமுறை. இது       ஹிந்துக்கள், பிற மத நம்பிக்கை முறைக்கு முற்றிலும் எதிரானது. அண்மையில், ஹலால் சின்னத்தை பேக்கரியில் நீக்குமாறு ஒரு பேக்கரி உரிமையாளரைக் கேட்டதற்காக ஹிந்து ஐக்யவேதி அமைப்பினர் நான்கு பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டனர். முஸ்லிம்களுக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட ‘ஹலால் முறை’ தற்போது அவர்களால் அசைவம் உட்பட அனைத்து பொருட்களிலும் கட்டாயமாக்கப்படுகிறது. இது, முஸ்லிம்களால் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்படும் பொருளாதார ஜிஹாத் என புகார்கள் எழுந்து வருகின்றன. APEDA அமைப்பின் இந்த நடவடிக்கை, ஹலாலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்  முயற்சியில், ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும் என நம்புவோம்.