ஹத்ராஸ் சம்பவத்தை உயிர்ப்புடன் வைத்திருந்து அதில் லாபமடைய சதி. முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு எதிராக சர்வதேச சதி நடக்கிறது என செய்திகள் வெளிவருகின்றன.
தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் இதே போன்று நடந்த சமகால சம்பவங்களை விடுத்து, இதில் மட்டும் கவனம் செலுத்தும் எதிர்கட்சிகள். முதற்கட்ட விசாரணையில் சில முஸ்லிம்கள் கைது, அவர்களை விடுவிக்க நடந்த போராட்டங்கள். சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என பெண்ணின் உறவினர்கள் எதிர்ப்பு. உண்மை அறியும் பாலிகிராப், நார்கோ சோதனைகள் நடத்தக்கூடாது என நீதிமன்ற படியேறும் காங்கிரஸ் கட்சியினர்.
பயங்கரவாத பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினர் ஹத்ராஸ் பயணம். சர்வதேச என்.ஜி.ஓக்கள் மூலமாக நடந்துள்ள பணப்பரிமாற்றம். போராட்டத்தை வழி நடத்த ஏற்படுத்தப்பட்ட இணையதளம். முகநூல், வாட்ஸப் குழு பிரசாராங்கள்.
இந்தியா டுடே பத்திரிக்கையாளர், பெண்ணின் சகோதரரிடம் என்ன பேச வேண்டும் என சொல்லித்தரும் ஆடியோ.
தடையை மீறி ஊர்வலம் சென்று, தானே கீழே விழுந்துவிட்டு, போலீசார் தள்ளினர், என பொய் கூறும் ராகுல். பிரியங்காவின் விஷம் தோய்ந்த வார்த்தைகள்.
தமிழகத்தில் நடந்த சமகால பலாத்கார சம்பவங்களை பற்றி பேசாமல், உ.பி பெண்ணுக்கு நீதிகேட்டு மெழுகுவர்த்தி போராட்டம் செய்யும் கனிமொழி. அந்த பெண் கற்பழிக்கப்படவில்லை என அலிகர் மருத்துவ பல்கலைகழகம் அறிக்கை.
தான் கற்பழிக்கப்படவில்லை என அந்த பெண்ணின் வாக்கு மூலம் என செய்திகள் வெளிவந்த பிறகும் விசாரணையை திசைதிருப்ப வேண்டுமென்றே நடத்தப்படும் போராட்டங்கள். இவைகளை எல்லாம் ஒன்றிணைத்து பார்க்கும்பொழுது, இந்த சந்தேகம் நமக்கு மேலும் வலுப்பெறவே செய்கிறது. உங்களுக்கு?