வேதபுறமாக இருந்த புதுச்சேரி

புதுச்சேரி 1954 நவம்பர் 1ல் சுதந்திர பூமியானது. 1962 ஆகஸ்ட் 16ல் மூவர்ண தேசியக் கொடி ஏற்றப்பட்டது. புதுச்சேரி நிர்வாகத்தில் பிரெஞ்சு நடைமுறைகளும் சுற்றியிருந்த பகுதியில் இந்திய நடைமுறைகளும் கடைபிடிக்கப் பட்டதால் புதிதாக நிர்வாக நடை முறை விதிகள் உருவாக்கப்பட்டு 1963 ஜூன் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரஞ்சிய நாகரிகம் இங்கு நிலவிய பாரம்பரியத்துடன் கலந்து போனதால் பன்னாட்டு நடைமுறைகள் இன்றும் இங்கு நிலவுவதைக் காணலாம். கலைகளின் தளத்தில் ராஜா பண்டிகையும், அதையொட்டிய மாறுவேடம் புனைந்தாடும் ‘மஸ் கரேத்’தும் நிகழ்கின்றது. ‘பெத்தாங்’ எனப்படும் உலோகக் குண்டு விளையாட்டு புதுவைக்கு உரித்தானது. புதுச்சேரி காவல்துறை அணியும் சிவப்புத் தொப்பி பிரெஞ்சு நடை முறையே. புதுச்சேரி அன்னியர் ஆட்சியில் 280 ஆண்டுகள் இருந்தது. இதில் 240 ஆண்டுகள் பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்தது.அப்பொழுது பிரெஞ்சு மொழியே ஆட்சி மொழியாக இருந்தது. ஆனால் தாய் மொழியாக தமிழ் மொழி இருந்தது. 1954ல் ஆட்சி மாற்றம் பெற்று இந்தியாவுடன் இணைந்த போது பிரெஞ்சு அரசு இந்திய அரசுடன் செய்துகொண்ட உடன்படிக்கை மூலம் பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாக நீடிப்பதற்கு வகை செய்யப்பட்டது. ஆனாலும் ஆங்கிலமே அலுவல் நோக்கங்களுக்கு பிரெஞ்சின் இடத்தை பற்றிக்கொண்டது. பிரெஞ்சு ஓர் அன்னிய மொழி அது நீக்கப்படும் போது இயல்பாக அவ்விடத்தில்அப்பகுதியில் வழங்கிய மொழியே அதாவது தமிழே இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் புதிய அன்னிய மொழியான ஆங்கிலம் பிரெஞ்சின் இடத்தில் அமர்த்தப்பட்டது. 1965ல் புதுச்சேரி அரசு அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டு இதன்படி அலுவல் சார் நோக்கங்கள் அனைத்திற்கும் தமிழே என்று முடிவு செய்யப்பட்டது. இது குடியரசுத் தலைவரால் உறுதியும் செய்யப்பட்டது. ஆனால் புதுவையின் ஆட்சியாளர்கள் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று கருதவே இல்லை. ஆங்கில மொழி அரிய ணையில் அமர்த்தப்பட்டு விட்டது! 1962 ஆகஸ்ட் 16 ல் புதுவை மாநிலம் இந்தியக் குடியரசில் இணைந்தது. அங்கு வசித்த மக்கள் அனைவரும் இந்தியக் குடி மக்கள் ஆனார்கள். எனினும் பிரெஞ்சு குடி மக்களாகவே இருக்க விரும்பு வோர் ஒப்பந்தப்படி அவ்வாறே இருக்க முடியும். பதிவு செய்த அனைவரும் தற்போது பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கிறார்கள்.  பிரெஞ்சுக்காரர்கள் காலத்திலிருந்தே அரசியல் தவிர புதுவை தமிழகத்துடன் பழக்கவழக்கத்தில் முழுமையாக இணைந்து தான் இருந்தது. அதனால் 1979 ல் இந்திய அரசாங்கம் பிரெஞ்சிந்திய பகுதிகளை அடுத்த மாநிலங்களுடன் இணைத்துவிடலாம் என்று எண்ணியது. அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியது. இது தெரியவந்ததும் புதுவையில் பதட்டநிலை ஏற்பட்டது.

 

Image result for பாண்டிச்சேரி

 

வன்முறைச் செயல்களில் சிலர் இறங்கினர். கடும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அரசாங்கம் இதை கைவிட்டது. அப்போது புதுவை அரசியல் தலைவர்கள் அடுத்த மாநிலங்களுடன் புதுவையை இணைத்தால் தங்களது செல்வாக்கு முடிந்து விடுமோ என்று அதிர்ச்சி அடைந்தார்கள். இதனால் பழைய புதுவையின் மீதமிருந்த தட்டுமுட்டு அம்சங்களை உயிர்பித்தனர். வீதிகளில் பிரெஞ்சுப் பெயர்களை பார்வையாக எழுதி னார்கள். ‘லே கபே’ (le cafe) போன்ற புது பெயர்களை புகுத்தினார்கள். இது இன்றும் புதுவை கடற்கரையில் காந்தி சிலை அருகே அரசு உணவகமாக இயங்கிக்
கொண்டிருக்கிறது. மேலும் பிரெஞ்சு தூதரகத்தில் ஒதுக்கி வைத்திருந்த டூப்ளே சிலையை பிரெஞ்சு நாட்டு பேராளர் இடம் திரும்பப் பெற்று போலித்தனமாக கடலோரத்தில் வைத்தார்கள்.இது இன்றும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் பிரெஞ்சு ஆதிக்கத்தை நினைவுபடுத்தி கொண்டிருக்கிறது! சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ அரவிந்தர் கல்கத்தாவில் இருந்து புதுச்சேரிக்கு வந்ததும் அவரது வாழ்க்கைப் போக்கில் மகத்தான மாற்றம் ஏற்பட்டது. புரட்சியாளராக நுழைந்த அவர் புனிதர் அரவிந்தர் ஆக மாறி இங்கேயே முக்தி அடைந்தார். அவரைத் தொடர்ந்து அரவிந்த ஆஸ்ரமத்தில் அன்னையும் ஆன்மிகப் பணியை தொடர்ந்தார். 2003ல் அமல்படுத்தப்பட்ட சட்டத்தின்படி பிரெஞ்சு இந்தியர்கள் கடல் கடந்த இந்தியர்கள் என்ற அந்தஸ்தைப் பெற்று மற்ற இந்தியர்கள் போல் ஒரு இடைஞ்சலும் இல்லாமல் வாழலாம். இது புதுச்சேரியை விட்டுப்போன இந்தியர்கள் மீண்டும் இங்கு குடியேற வழிவகுத்தது. ஐரோப்பிய பிரெஞ்சுக்காரர்களும் புதுச்சேரியில் குடியேறுகிறார்கள், தொழில் நிறுவனங்
களை உருவாக்குகிறார்கள். பிரெஞ்சு மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் ஒரு பிரெஞ்சு தூதரக கிளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பிரெஞ்சு பிரஜைகள் பிறப்பு இறப்பு பதிவு செய்து கொள்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்க சம்பந்தமான விஷயங்களும் இங்கு செய்து கொடுக்கப்படுகிறது. வசதியற்ற பிரெஞ்சு மக்களுக்கு இங்கு நிவாரண நிதி கொடுக்கப்படுகிறது. புதுச்சேரியின் நினைவாக பாரிஸ் மாநகரில் ‘போன்திசேரி வீதி’ ஒன்று உள்ளது. புதுவையில் இருந்து பிரான்சுக்கு குடியேறியவர்கள் பாரிஸில் ஹிந்துக் கோயில்களை அமைத்தனர். விநாயகர் தேர் ஊர்வலம் புகழ் பெற்றது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட வேதபுரீஸ்வரர் கோயில் பதினேழாம் நூற்றாண்டின் கடைசி வரை இருந்தது. இந்தியாவிற்கு வந்த எல்லா ஐரோப்பியர்களைப் போலவே பிரெஞ்சுக்காரர்களும் கிறிஸ்தவ மதத்தை பரப்பும் பணியை மேற்கொண்டார்கள். கால்பெர்ட் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தை 1664ல் ஏற்படுத்தியபோது அதற்கு இட்ட நிபந்தனைகளில் கிறிஸ்தவ மதத்தை பரப்ப வேண்டும் என்பது முக்கியமான தாகும். இந்த நிறுவனம் கிறிஸ்தவ தேவாலயங்களை நிறுவியது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் பாதிரியார்கள் இந்திய மதங்களைத் தாக்கத் தொடங்கினார்கள். புதுச்சேரியில் நடந்த கிறிஸ்தவ விழாவில் பேசிய பாதிரியார், பிரான்சில் கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவற்றை பிரெஞ்சு மன்னர் அழித்ததைப் போன்று புதுச்சேரியிலும் கோவில்களை இடித்து கிறிஸ்தவ மதத்துக்கு எதிரானவற்றை எல்லாம் அழிப்பதும் உங்கள் கடமை என்றார். இதைத்தொடர்ந்து ஹிந்துக்களை மிகவும் வெறுத்த டூப்ளே
ஆட்சிக் காலத்தில் பாதிரிகள் இவனை வற்புறுத்தி வேதபுரீஸ்வரர் கோயிலை இடிப்பதற்கான ஆணையைப் பெற்றனர். கோர் தொக்சு பாதிரி கோவிலை இடிக்கும் பணிக்கு தலைமை ஏற்று கோயிலில் இருந்த லிங்கத்தின் மீது எச்சில் துப்பினான். தன்னுடைய பூட்ஸ் காலால் எட்டி உதைத்தான். பின்னர் லிங்கம் சம்மட்டியால் அடித்து உடைக்
கப்பட்டது. டூப்ளே தன் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஆனந்தரங்கப் பிள்ளையிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தும் கூட இது போன்ற ஒரு மோசமான நாசச் செயலுக்கு அவன் அனுமதி கொடுத்தது ஹிந்து மதத்தின் மீது அவன் கொண்டிருந்த வெறுப்பினாலேயே. ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு மிக்கவரான ஆனந்தரங்கப் பிள்ளை கூட இதனைத் தடுக்க முடியவில்லை. அவரால் அவருடைய நாட் குறிப்பில் இந்தச் நாசச்செயலை எழுதி வைத்துக்கொண்டு சில காலம் அதனை எண்ணி புலம்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் போனது.

கோயில் தரைம் மட்டமாக்கப்பட்ட பின் அந்த இடத்தில் பாதிரியார்கள் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை கட்டினார்கள். அது தான் தற்போது இருக்கும் ஆன்ழ் மாதா தேவாலயம். பிரெஞ்சு அரசன் மூன்றாம் நெப்போலியன் வழங்கிய மேரி அன்னையின் படம் ஒன்று இங்கு உள்ளது. பிரெஞ்சு தொல்லியல் ஆய்வாளர் இந்த மாதா கோயிலை ஆய்வு செய்த போது முதலாம் ராஜ ராஜனின் கல்வெட்டுக்கள் சிலவற்றை கண்டுபிடித்தார். அவற்றில் இவ்வூர் வேதபுரம் என்றும் திருக்கோயில் உடையார் வேதபுரீஸ்வரர் என்றும் காணப்பட்டது. வேதபுரம் என்னும் பெயர் புதுவைக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம்வரை இருந்தமையால் தான் புதுவைக்கு வந்த பாரதியாரும் தம்முடைய புதிய கோணங்கியில் புதுவையை வேதபுரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

One thought on “வேதபுறமாக இருந்த புதுச்சேரி

  1. Feeling very bad to read this… Destruction of Shiva temple…
    Just a correction…
    Don’t call mary as matha or annai…
    These are Tamil words used to glorify Meenakshi…

Comments are closed.