பாரத பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் வெளியிட்டு உள்ள தகவலில், தமிழகத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு வேலையின்மை விகிதம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘அடுக்கடுக்கான தமிழக அரசின் முயற்சிகள், அடுத்தடுத்து மேற்கொள்ளும் முதலீட்டு ஒப்பந்தங்கள், முடுக்கி விடப்பட்ட தொழில் சூழல், செழித்து நிற்கும் விவசாயம் விளைவாக, 5 ஆண்டுகளில் மிகக்குறைந்த வேலையின்மை விகிதம் 0.5 சதவீதம் மக்களின் மகிழ்ச்சியோடு வெற்றிநடைபோடும் தமிழகம்’ என பதிவிட்டுள்ளார்.