தூர்தர்ஷன் தொலைகாட்சி, டிஸ்கவரி கிட்ஸ் எனும் தனியார் தொலைகாட்சியுடன் குழந்தைகள் நிகழ்ச்சி ஒளிபரப்புக்காக கடந்த ஆகஸ்ட்டில் ஒரு ஒப்பந்தம் போட்டது. இதன்படி ‘ஷேக் சில்லியும் நண்பர்களும்’ என்ற ஒரு தொடர் ஒளிபரப்பப்பட்டது. ஒரு முஸ்லிம் சிறுவன், யோகாவையும் ஹிந்து சாமியார்கள், குருமார்களையும் கேவலப்படுத்துவதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஹிந்துக்களை புண் படுத்தும் விதத்தில், இது டிஸ்கவரி தொலைகாட்சியால் திட்டமிட்டே ஒளிபரப்பப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதை அப்ஸான்ஸ் எண்டர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு எழவே இந்த நிகழ்ச்சியை நிறுத்துவதாக தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.