வார ராசிபலன் – விகாரி வருடம், பங்குனி 2 முதல் பங்குனி 8 வரை( மார்ச் 15 – 21 ) 2020

ஜோதிடச் சுடரொளி ஸ்ரீதரம் குரு சிவகுமார் 9566222468

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: இது நாள் வரை சிரமம் கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். கடன் தீரும். பிரச்சினைகள் விலகும். உயரதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகளை சாதகமாக மாற்றுவீர்கள். அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கிடைக்கும்.

பெண்மணிகள்: சொல்லாற்றலால் செயற்கரிய வேலைகளை சுலபமாக செய்திடுவீர்கள். பொருளாதாரம் வளர்ச்சி ஆகும். இடையூறுகளை எளிதாக கையாளுவீர்கள். ஆன்மிகம் அமைதி தரும். வயிற்று வலி வந்து நீங்கும்.

மாணவ மணிகள்: பணப் பிரச்சினைகள் எளிதாக கையாண்டு, வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழியினரால் நன்மை கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் துவக்கலாம். வருமானம் அதிகரிக்கும். திறமையாக செயல்பட்டு சிக்கல்களை தீர்ப்பீர்கள்.

அரசியல்வாதிகள்: எதிராக செயல்படுபவர்களை நட்பாக்கிச் கொள்ளவும்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர் பார்க்கலாம். பழைய கடன்கள் தீரும். புதிய  கடன்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். புதிய வாகனங்களை வாங்க முயற்சி செய்வதை ஒத்திப் போடவும். அனைவரிடமும் நட்புடன் பழகவும்.

பெண்மணிகள்: சுபச் செலவுகள் ஏற்படும். உறவினர் மத்தியில் பிரச்சினைகள் உருவாகலாம். பொருட்கள் திருட்டு போகலாம் என்பதால் கவனம் தேவை. இல்லறத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

மாணவ மணிகள்: அரசு ஆதரவு கிடைக்கும். சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

சிறுதொழில், வியபாரம்: வருமானம் அதிகரிக்கும். புதிய தொடர்புகளால் வளர்ச்சிக்கு வழி கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவி கிடைக்கும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள் : அலுவலகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செய்யும் துணிச்சல் அதிகரிக்கும். வேறுமொழி பேசுபவரால் அனுகூலம் ஏற்படும். எதிர் பாரதவிதமாக பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப் படுவீர்கள்.

பெண்மணிகள்: உறவினர்களிடையே வாக்குவாதம் தவிர்க்கவும். தோழிகளால் சில பிரச்சினை உருவாகலாம். கருத்து வேறுபாடுகளால் மனக்கவலை வந்து நீங்கும். சிலருக்கு திருமணமும் நடைபெறும். சுபச் செய்திகள் கிடைக்கும்.

மாணவ மணிகள்: கல்வியில் நாட்டம் குறையாமல் கவனமாகப் படிக்கவும். இடையூறு செய்யும் நண்பர்களைத் தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய தொழில் துவங்கலாம். லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.

அரசியல்வாதிகள்: மாற்று கட்சியினர் ஆதரவு கிடைக்கும். தலைமையின் உத்தரவு பெற்று செயல்படவும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களிடையே அனுசரித்துச் செல்லவும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு சிலருக்குக் கிடைக்கும். பகுதி நேர மூலமாகவும், ஊக்கத்தொகை வழியாகவும் வருமானம் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: பேசும்போது கவனமாகவும் தெளிவாகவும் இருக்க  வேண்டும். பலவகையிலும் தனலாபம் உண்டு. ஆடை, ஆபரணச்  சேர்க்கை உண்டு. பிறந்த வீட்டு சொத்து பாகமும் கிடைக்கும். உடல் நலனின் கவனம் தேவை.

மாணவ மணிகள்: பெற்றோர்களின் ஆதரவுடன் வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: நிலுவைத் தொகை கிடைக்கும். கடன் தீரும். வாடிக்கையாளர்கள் ஆதரவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: அலைச்சல், உழைப்பு அதிகரிக்கும்.

திட்டமிட்டு செயலாற்றினால் கடன்கள் தீரும்!

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: அடுத்தடுத்து ஏற்படும் வேலைகளினால் அயர்ச்சி ஏற்படும். குழப்பமான மனநிலையைத் தவிர்த்து புதியதாக சிந்தித்து செயலாற்றவும். சக ஊழியர்கள், அதிகாரிகள் ஆதரவு மீண்டும் கிடைக்கும். எவரைப் பற்றியும் விமரிசிக்க வேண்டாம்.

பெண்மணிகள்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் பழகவும். இல்லற வாழ்வில் இணக்கமான சூழல் ஏற்படும். வருமானத்தை முதலீடு செய்வீர்கள். பிறந்த வீடு செல்ல திட்டமிடுவீர்கள்.

மாணவ மணிகள்: மதிப்பெண் அதிகரிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகளால் நன்மை உண்டு. மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தகுந்த நபர்களின் அறிவுரை ஏற்று செயல்படவும். உழைப்பு அதிகரிக்கும். தனலாபம் உண்டு.

அரசியல்வாதிகள்: தொண்டர்கள் ஆதரவு அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் திட்டத்தால் உங்களின் வளர்ச்சிக்கு ஊறு விளையலாம். உயரதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளவும். உடல் நலம், மனநலம் பாதிக்கப்படலாம். உழைப்பு அதிகரிக்கும். அதிக அலைச்சல் தவிர்க்கவும்.

பெண்மணிகள்: குடும்பத்தினரின் ஆலோசனை பெற்று செயல்படவும். பிறரின் செயல்களை பொறுமையாக கண்காணிக்கவும். உடல் நலனில் அக்கறை காட்டவும். சுகாதாரமற்ற இடங்களில் உணவைத் தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவிகளைப் பெறுவீர்கள். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

சிறுதொழில், வியாபாரம்: நேரடி கண்காணிப்பில் தொழிலை கவனிக்கவும். வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்யவும்.

அரசியல்வாதிகள்: வம்புகளில் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: அதிக பணி காரணமாக உடல் சோர்வு ஏற்படும். தடையாக இருப்பவர்களை சமாளிக்கும் திறன் உருவாகும். ஊதிய உயர்வு கிடைக்கும். கடன்கள் தீரும். முதலீடு செய்தவதில் ஆர்வம் தோன்றும் தனலாபம் உண்டு.

பெண்மணிகள்: செலவு செய்வதற்கு முன் சேமிக்கும் எண்ணம் ஏற்படும். ஆன்மிகப் பெரியவர்களை, ஆலய தரிசனத்தை மிகவும் விரும்புவீர்கள். இல்லறத் துணையுடன் கலந்தாலோசித்து செயலாற்றவும்.

மாணவ மணிகள்: குழப்பம் தவிர்க்கவும். ஆசிரியர், பெற்றோரிடம் ஆலோசித்து செயல்படவும். பாடங்களில் கவனம் தேவை.

சிறுதொழில், வியாபாரம்: ஒப்பந்தங்கள் நிறைவேறும். போட்டி நிறுவனங்களைவிட முன்னேற்றம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: உயர் பொறுப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றவும். தேவையான உதவிகளை தலைமை தரும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: அதிக உழைப்பு இருந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவால் மனச்சுமை குறையும். செலவுக்கேற்ற தொகை கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பெறுவதிலும், வாங்குவதிலும் எச்சரிக்கை தேவை.

பெண்மணிகள்: குடும்ப விஷயங்களில் பிறர் தலையிடுவதை தவிர்க்கவும். இல்லறத் துணையின் பயணங்களால் நன்மை உண்டு.

மாணவ மணிகள்: சாமர்த்தியமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனை பிறக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: அதிக முதலீடு வேண்டாம். புதிய உத்திகளை ஒத்திப்போடவும். தனலாபம் குறையாது.

அரசியல்வாதிகள்: தொண்டர்களை அரவணைக்கவும். வெளி விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: உடல் சோர்வும் மனசோர்வும் ஏற்பட்டாலும், எப்போதும் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் குறையாது. விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் இணைந்திடுவார்கள். உங்கள் ரகசியத்தை பகிர வேண்டாம். அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் முன்நின்று நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்கவும். தனவரவு உண்டு. சிந்துத்து முடிவெடுக்கவும்.

மாணவ மணிகள்: அதிக மதிப்பெண் பெற அதிக உழைப்பு தேவை. நிவைாற்றாலை அதிகரிக்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: தேங்கிய பொருட்களை விற்று விடவும். புதிய கொள்முதல் தரமறிந்து பெறவும்.

அரசியல்வாதிகள்: கட்சிப் பணியை பொறுப்புடன் செயல்படுத்தவும். பயணங்கள் தவிர்க்கவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: கெளரவ பதவியில் அமர்த்தப்படுவீர்கள். வாக்குவன்மை ஏற்படும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நண்பர்களின் நட்பு பலப்படும். சிலரின் நடவடிக்கைகளை கண்டு விலகி விடுங்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு.

பெண்மணிகள்: எதையும் ஆய்வு செய்து முடிவெடுக்கவும். உறவுகளை அரவணைத்துச் செல்லும் நீங்கள், உங்களின்  வாக்கால் வசமாக்குவீர்கள். கடன் தீரும்.

மாணவ மணிகள்: உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள். நேர்முகத் தேர்வுக்கு தயாராகுங்கள்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களிடம் பக்குவமாக பேசி வெற்று காண்பீர்கள். தொழில் சிறப்பாக நடைபெறும்.

அரசியல்வாதிகள்: தலைமையை ஆதரித்து பேசவும். தொண்டர் பலத்தை அதிகரிக்கவும். செலவை குறைக்கவும்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் உங்களின் விருப்பத்தின்படியே அனைத்தும் சுலபமாக நடைபெறும். விருப்பமான இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.  பிரயாணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம், மரியாதை கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.

பெண்மணிகள்: சேமிப்பு தேவை. அனாவசியமடான பேச்சுகளை குறைத்து சுறுசுறுப்பாக செயலாற்றவும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. கண்களை பாதுகாக்கவும். மருத்துவம் தேவை.

மாணவ மணிகள்: வாக்குபலத்தால் வெற்றி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: பல விதங்களில் தனலாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: ஆவேசத்தை தவிர்த்து அமைதியாக இருக்கவும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: ஊதிய உயர்வால் மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பும் செலவும் ஏற்படும். பொருளாதார பலம் ஏற்படும். சக நண்பர்களில் ஒரு சிலர் பொறாமை கொள்வார்கள்.

பெண்மணிகள்: குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். திருமண ஏற்பாடுகளில் உங்களின் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். உங்களின் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும்.

மாணவ மணிகள்: முயற்சி அதிகம் தேவை. செலவுகளை குறைக்கவும். நண்பர்களில் சிலரை தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் செயல்களை கவனித்து முடிவெடுக்கவும். உறவினர் ஒருவரை பங்குதாரராக இணைக்கவும்.

அரசியல் வாதிகள்: தலைமை அதிகரிக்கும். தனலாபம் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *