வன்முறையை தூண்டும் வக்கர புத்தி படைத்த ஊடகங்கள்

சில தினங்களாக நேஷனல் ஹெரால்ட், தி குவின்ட் (The Quint ) , நியூயார்க் டைம்ஸ், பி.பி.சி. போன்ற  ஊடகங்கள்,  இந்திய முஸ்லீம்கள் என்ற தன்மையை மாற்றும் விதமாக காஷ்மீர் முஸ்லீம் என ஒரு தனிப் பிரிவை உருவாக்குகிறார்கள்.  இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் என்ற தலைப்பில்  நேஷனல் ஹெரால்ட் இந்தியா என்ற பத்திரிக்கையும், தி குவின்ட் என்ற வைப்சைட்டிலும் முஸ்லீம் வெறித் தனத்தை ஊக்கப்படுத்தும் விதமாக கடிதம் என்ற பெயரில் எழுதியுள்ளார்கள்.   எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாகவும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்ட கருத்தாக நினைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

          இடது கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சீத்தாராம் யெச்சூரி, காஷ்மீரில் உள்ள தனது கட்சியின் தலைவரான யூசுப் தாரைகாமி  ( Yousuf Tarigami ) உடல் நலக் குறைவால் இருப்பதால், அவரை  சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என உச்ச நீதி மன்றத்தின் அனுமதியுடன் சந்தித்தார்.   உச்ச நீதி மன்றம், ஒரு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என்ற நிலையிலும், நாட்டின் இறையான்மையை காக்க வேண்டும் என்ற நியதியின் காரணமாக, சீத்தாராம் யெச்சூரிக்கு அனுமதி அளித்த போது, எக்காரணம் கொண்டு அரசியல் பேசக் கூடாது, அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என அனுமதி அளிக்கப்பட்டது  (  which strictly forbads him from any political activity as if this was some crime )   இந்த நிகழ்வை வைத்து மேற் கூறிய ஊடகங்கள்     An open letter to Indian Muslims;  Kashmir has exposed your leaders’ fet of clay      என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் சில வாசகங்கள் வன்முறையை தூண்டுவிதமாக அமைந்துள்ளது.

           இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் காஷ்மீர் தலைவரை காப்பாற்ற, கட்சியின் அகில இந்திய தலைமை முயன்றது.  ஆனால் இந்திய முஸ்லீம்களுக்காக பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய தலைவர்கள் ஏன் கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீரில் உள்ள 80 லட்சம் முஸ்லீம்கள் வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள்,  அவர்களை மீடக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.   இந்த செய்தியே தவறானது என்பதும், இஸ்லாமியர்களை வன்முறையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீய நோக்கிலும் எழுதப்பட்ட வாசகமாகும்.   இந்த ஊடகங்கள் பொதுவாக எழுதவில்லை.   வன்முறையை தூண்டுபவர்களின் உணர்வுகளை தூண்டும் விதமாகவும், அவரது ஆதரவாளர்கள் உணர்சி பெறும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது.

          ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினரும்,  ஏ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான ஒவாஸி,  சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஆஸம் கான், சன்னி முஸ்லீம் பிரிவின் தலைவரான மெளானா முகமது மதானி,  தங்களை மதசார்பற்றவர்களாக காட்டும், ஜாவத் அக்தர், சயீத் நக்வி, ஷப்னா ஆஸ்மி, போன்றவர்களுக்கு எழுதப்பட்ட கடிதமாக வரையப்பட்டுள்ளது.  பாராளுமன்ற தேர்தலில், பிரிவினைவாதியான கன்னியா குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜாவத் அக்தரும், அவரது மனைவியுமான ஷப்னா ஆஸ்மி,  நாட்டின் நலனுக்காக இஸ்லாமியர்கள் அனைவரும் கன்யா குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரிவினையை தூண்டுவிதமாக பேசியவர்கள்,  காஷ்மீர் முஸ்லீம்களுக்காக ஏன் வாய் திறக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இந்த கட்டுரை.

          பாராளுமன்றத்தில் காஷ்மீருக்கான அரசியல் ஷரத்து 370 மற்றும் 35 ஏவை ரத்து செய்யப்படும் தீர்மானத்தின் மீது கடுமையாக எதிர்த்த ஒவாஸி, வெளியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   உ.பி., பிகார், மகாராஷ்ரா மற்றும் தெலுங்கான, ஆந்திர மாநிலங்களில் அதிகமான முஸ்லீம் ஆதரவாளர்களை கொண்டுள்ள ஒவாஸி, காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் மட்டும் குரல் கொடுத்து விட்டு, ஒதுங்கியது சரியானது தானா?  பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒவாஸி, காஷ்மீர் முஸ்லீம்களை சந்திக்க, சீத்தாரம் யெச்சூரியை போல், உச்ச நீதிமன்றத்தை ஏன் அனுகவில்லை.? இவ்வாறு கேள்வி கேட்பது, வன்முறையை தூண்ட பயன்படுத்தும் சொற்களாகும்.

          சமாஜ்வாதி கட்சியில் முன்னணியில் உள்ள முஸ்லீம் தலைவர் ஆஸாம் கான்.  ஒரு வழக்கறிஞர்,  81 வழக்குகளை சந்தித்திக்கும் தலைவர்.   17 வது பாராளுமன்றத்தில் பதவி பிரமாணம் எடுக்கும் போது,  இஸ்லாமிய கோஷங்களை எழுப்பி கண்டனத்துக்குறியவராக மாறியவர்.  இவரை தொடர்ந்து மற்ற கட்சியில் உள்ள இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களும்  கோஷங்களை எழுப்பி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.  81 வழக்குகளை சந்திக்கும், ஆஸாம் கான் ஏன் காஷ்மீர் முஸ்லீம்களை சந்திக்க, உச்ச நீதி மன்றத்தின் அனுமதியை பெற அனுகவில்லை.   காரணத்தை கூற தயக்கம் காட்டுகிறார் என ஊடக தர்மத்தை மீறி மேற்படி ஊடகங்கள்  செயல்பட்டுள்ளது.

          அதிக அளவு தாக்குதலுக்கு உள்ளானவர் தயோபந்த் ஜமாத்-உலமா-இ-இந்த்  என்ற அமைப்பின் தலைவரான மௌலான முகமது மதானியும் அவரது உறவினரான அர்ஷத் மதானியும்.  நாடு முழுவதும் உள்ள சன்னி பிரிவின் தலைவராக கருதப்படுபவர் மதானி.   இஸ்லாத்திற்கு எதிராக உள்ளவர்களுக்கு பத்வா விதிப்பவர்.   2019 செப்டம்பர் மாதம் 12ந் தேதி  தயோபாந்த் ஆண்டு கூட்டம் நடந்த போது,  காஷ்மீர் பிரச்சினை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.  ஆனால் அரசியல் ஷரத்து 370 மற்றும் 35 ஏ பிரிவை நீக்கியதற்கு  ஆதரவாக தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.   இதன் காரணமாக ஆளும் கட்சியின் நட்பை பெற்று விட்டார்கள்.  ஆனால் காஷ்மீரில் உள்ள 80 லட்சம் இஸ்லாமியர்களை வஞ்சித்து விட்டார்கள் என கட்டுரையாளர் எழுதியுள்ளார்.

          இஸ்லாமியர்களின் நலனுக்காகவே பாடுபடும் அமைப்பாக காட்டிக் கொள்ளும் தியோபாந்த் ஜமாத்-உலாமா-இ-இந்த் என்ற அமைப்பினர்,  இஸ்லாமிற்கு எதிராக கருத்து கூறுபவர்களுக்கு பட்வா விதிக்க உரிமையுள்ளதாக கூறுபவர்கள், ஏன் காஷ்மீர் முஸ்லீம்களை பாதுகாக்க உச்ச நீதி மன்றம் செல்லவில்லை.  இந்நிலையில்,  காஷ்மீர் சலுகை ஷரத்து ரத்து செய்யப்பட்ட பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்திரவு அமுலில் இருந்த போது, ஜமாத் – உலாமா –இ- ஹிந்த் அமைப்பின் தலைவரான அர்ஷத் மதானி , செப்டம்பர் மாதம் ஆர்.எஸ்.எஸ். சர்சங்க சாலக் மோகன் பாவகத் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பி, பிரிவினைக்கு வித்திட்டுள்ளார்.   மோசமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்து வன்முறையை தூண்ட முயலுகிறார்.  அதாவது  ஆர்.எஸ்.எஸ். தலைவரை சந்திதத பின்னர் தான்  தியோபாந்த்தின் ஆண்டு கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தான் அரசியல் ஷரத்து 370 மற்றும் 35 ஏ ரத்து செய்ததை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குறிப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ். கட்டளைபடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

          ஷியா பிரிவின் தலைவரான கல்பே ஜாவாத்தும் ஆதரித்து பேசியதால்,  கட்டுரையாளர் , இந்தியாவில் உள்ள ஷியா சமூகத்தினரின் நலனுக்காக ஈரான் மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தொண்டு நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான நிதி பெற்றுள்ளார்.   பெற்ற நிதிக்கு முறையான கணக்கு கிடையாது.  எனவே இவர் மீது வழக்கு உள்ளது.  எனவே தான் சார்ந்த முஸ்லீம்கள் காஷ்மீரில் படும் துன்பத்தை கண்டு கொள்ளாமல், வழக்கிலிருந்து தப்பிக்க நாடகமாடுகிறார் என குறிப்பிட்டு வன்முறையை தூண்டுகிறார்.   இதை விட மிகவும் மோசமான ஒரு கேள்வியை கட்டுரையாளர் எழுப்புகிறார்,  அதாவது நாடு விடுதலை பெற்றதிலிருந்து காஷ்மீரில் உள்ள சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் சலுகை பெற்று வருவது ஷியா பிரிவினருக்கு தெரியாதா?  இப்பொழுது தான் தெரிகிறதா என்றும் குழப்பத்தை விதைக்கிறார்.

          இதே சமயத்தில், சன்னி பிரிவின் தலைவரான டெல்லி ஜாமியா மசூதி  அகமது புகாரியின் மீதும், பேரேலியின் சன்னி பிரிவு இஸ்லாமிய தலைவர்களும் வாய் மூடி மௌனியாக காட்சி தருகிறார்கள்.  இவர்கள் மீது வழக்கு இருப்பதால், காஷ்மீர் செல்ல பயப்படுகிறார்கள் என கூறி, மத கலவரத்தை தூண்டு விதமாக எழுதியுள்ளார்.

          அந்நிய நாட்டு ஊடகங்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்புவதில் முன்னணியில் உள்ளன.   இந்தியாவில் உள்ள சிலர், அரசுக்கு எதிராக நடத்தும் ஆர்பாட்டங்கள் கூட, அந்நிய ஊடகங்களுக்கு பரபரப்பு செய்தியாக மாறுகிறது.  பாகிஸ்தானுக்கு மறைமுகமான உதவிகளை செய்து வருகிறார்கள்.  இது தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆகஸ்ட் 6, 2019 தேதியிட்ட சியாசாட்.காம் மேற்கோளிட்டுள்ள தனது அறிக்கையில், “காஷ்மீர் மக்கள் இப்போது மற்ற மாநில மக்கள் அனுபவிக்கும் சம உரிமைகளைப் பெறுவார்கள்” என்று கூறுகிறது, இது இப்போது அவர்களுக்கு நல்லது என்று குறிக்கிறது. 370 மற்றும் 35 ஏ பிரிவு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்கியது, இது அரசியலமைப்பால் காஷ்மீர் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளுக்கு மேலாகவும், அதற்கு மேலாகவும் இருந்தது என்று ஷியா முஸ்லிம்களுக்குத் தெரியாதா?

அசாம் கானைப் போலவே, கல்பே ஜாவாத்தும் அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். இந்தியாவில் ஷியா சமூகத்தின் நலனுக்காக ஈரானில் இருந்து பிற மத்திய கிழக்கு நாடுகளுடன் தொண்டு நிறுவனமாக வரும் கணக்கிடப்படாத வெளிநாட்டு நிதிகளை குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஷியா வக்ஃப் குழுவின் தலைவரான வசீம் ரிஸ்வி, தேசிய தொண்டு நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தியதாக அவரது ஒருகால நம்பகத்தன்மையிலிருந்து சமீபத்திய குற்றச்சாட்டு வந்தது. கல்பே ஜாவாத்தின் பரிந்துரைகளின் பேரில் ஷியா வக்ஃப் குழுவின் தலைவராக வசீம் ரிஸ்வி நியமிக்கப்பட்டார் என்பது சுவாரஸ்யமானது. ஆனால் அது அவர்களின் போன்ஹோமி மற்றும் நட்புறவின் நாட்களில் இருந்தது. இன்று அவர்கள் காப்பகங்கள். கல்பே ஜாவத் சமீபத்தில் வசீமை இஸ்லாத்தின் எதிரி என்று விவரித்தார்