ரேஷன் கடைகளில் பனைபொருட்கள்

‘பொங்கல் வைக்க உதவாத சர்க்கரையை பொங்கல் தொகுப்பில் தமிழக அரசு வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதில் வெல்லம், தமிழகத்தின் மாநில மரமான பனையில் செய்யப்பட்ட பனை வெல்லம் போன்ற பொருட்களை வழங்க வேண்டும்’ என தமிழக மக்களின் சார்பாக நமது விஜயபாரதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ‘ரேஷன் கடைகளில் பனை வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பனை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும்’ என தெரிவித்துள்ளார். இதற்கு விஜயபாரதம் தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறது.