ராணுவத்தை சிறுமைபடுத்தும் சிறுமதியினர்

நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள அனில் கபூர் நடித்துள்ள ஒரு திரைப்படத்தின் முன்னோ ட்டம் சமீபத்தில் வெளியானது. அதில் விமானப்படையின் சீருடையை அணிந்து தவறான வார்த்தைகள் பேசுவது, சீருடையை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு விமானப்படை தன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. உடனே காங்கிரஸ் கட்சியினர் விமானப்படையை அவதூறாக பேசியும் கிண்டலடித்தும் சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர். நம் தேசத்தை அல்லும் பகலும் காவல் காக்கும் காவல் தெய்வங்களான நம் ராணுவத்தை இழிவுபடுத்தும் அந்த நிறுவனம் மீதும் அவதூறு பேசுபவர்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.