ரத யாத்திரைக்கு வரவேற்பு

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரத்தில் துங்கபத்ரா நதியில், துங்கபத்ரா மஹா புஷ்கர விழா நவம்பர் 21 முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, சாது, சன்யாசிகள், துறவியர் பெருமக்கள், ஆதின குருமார்கள் திரளாக செல்கின்றனர். டிசம்பர் 2ம் தேதி நடைபெறும் புஷ்கர நிறைவு விழாவில் பங்கேற்று மஹா புஷ்கரத்தில் புனித நீராட தருமபுரம் ஆதீனம் செல்கிறார். இதற்காக திருமடத்திலிருந்து குரு லிங்க சங்கம ஞான ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. சொக்கநாதப் பெருமானின் திருஉருவத்தை தலையில் சுமந்து ரத யாத்திரை செல்கிறது. இந்த ரத யாத்திரைக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குரு ஆஸ்ரமத்தில் சிறப்பு பூஜைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அகில பாரத இணை பொதுச்செயலாளர் ஸ்தாணுமாலயன் மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.