மாமல்லபுரத்தில் சீன அதிபரும் இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசிய போது மோடி வடித்த கவிதை இப்போது சமூக வலைதலைத்தில் அதிவேகமாக பரவி வருகிறது அதனுடைய தமிழாக்கம் இதோ
அலைகடலே!
அடியேனின் வணக்கம்
அளப்பரிய, முடிவற்ற,
ஒப்பில்லாத வர்ணனைகளைக்
கடந்த நீலக்கடலே
உலகிற்கு உயிரளிக்கும் நீ
பொறுமையின் இலக்கணம்
ஆழத்தின் உறைவிடம்
அலைகடலே!
அடியேனின் வணக்கம்.
வெளித்தோற்றத்திற்கு கோபமாய், வீரத்துடன்
பேரிரைச்சலோடு எழும் அலைகள்
-உன் வலியா? வேதனையா?
துயரமா? எதன் வெளிப்பாடு?
இருந்தபோதிலும் உன்னை
கலக்கமின்றி, தடுமாற்றமின்றி
உறுதியுடன் நிற்க செய்கிறது
உன் ஆழம்.
அலைகடலே!
அடியேனின் வணக்கம்.
உன்னிடம் உள்ளது எல்லையில்லாத வலிமை
முடிவில்லாத சக்தி ஆனாலும்
பணிதலின் பெருமையை
நிமடந்தோறும் நவில்கிறாய்-நீ
கரையைக் கடக்காமல்
கண்ணியத்தை இழக்காமல்.