ஆன்மிக, சமயப் பணிகளோடு சமுதாயப் பணிகளிலும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஈடுபட்டு வந்தார். ஜனகல்யாண் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நலிவடைந்த மக்களின் உயர்விற்காக, குறிப்பாக பல கிராமங்களில் பல்வேறு சேவைகளை தனது பக்த கோடிகள் மூலம் நடத்த முயற்சிகள் செய்தார்.
காலனிகளில் நலிவடைந்த கோயில்களை புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகங்கள் செய்து வைத்தார். தீண்டாமையையும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளையும் அகற்றி சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கப் பணிகளைப் பாராட்டிய ஸ்வாமிஜி 1982ல் சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண சாரதா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சங்கத்தின் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் ஆசியுரை வழங்கும்போது, ஆர்.எஸ்.எஸ் ஒரு சிறந்த பல்கலைக் கழகம் என்று பாராட்டிப் பேசினார். முக்தி பெற்ற அவரது ஆன்மா தொடர்ந்து நமக்கு வழிகாட்டட்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்.