மறைக்கப்படும் உண்மைகள்

மாதொருபாகன் என்றதொரு  நாவல்.  பெருமாள் முருகன் என்பவர் ஆசிரியர்.  பெண்மையை கொச்சைப்படுத்தும், பிறப்பை கேள்விக்குறியாக்கும், திருச்செங்கோடு என்ற மண்ணின் பெருமையை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு எழுத்து முயற்சிக்கு சொந்தக்காரர் இவர்.

ஒரு நாவலையோ, வரலாற்று நூலையோ அல்லது சிறுகதையையோ எழுதும் ஒரு எழுத்தாளன் சமுதாயத்திற்கு சொல்ல வேண்டிய கருத்துக்களை செவ்வனே சொல்ல வேண்டும்; நல்லதைச் சொல்ல வேண்டும்; உண்மையைச் சொல்லவேண்டும். மாறாக, சமுதாயத்தை ஏளனம் செய்வதை ஒரு காரியமாகக் கொண்டு செயல்பட்டானே ஆனால், அவனது முயற்சியின் மீது எழுவது இயல்பே.  இதற்கு முன் பல்வேறு சமயங்களில் பல்வேறு நூலாசிரியர்களின் முயற்சிகள் முடங்கிப் போனது என்பது வரலாற்று உண்மை.  அவர்களும் சமுதாயத்தை படம் பிடிக்கத்தான் எழுதினார்கள்.  அவர்களது எழுத்துக்களும் உண்மையைத்தான்  உரைத்தது.  இருந்தபோதிலும், அந்தந்த காலக்கட்டத்தில் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்தவர்களால் அம்முயற்சிகள் தடை செய்யப்பட்டன என்பது வரலாற்று உண்மை.soniya-neru

* இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நேர்முக உதவியாளராக பதவி வகித்தவர் எம்.ஓ. மத்தாய் என்ற கேரளத்தவர்.  அவரது பணியின்போது நேருவோடும் நேருவின் குடும்பத்தினரோடும் மிகவும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.  நேருவோடு பணியாற்றிய தருணங்களை நினைவுகூரும் வகையில், நேரு காலத்தின் எனது நினைவலைகள்” (Reminiscences of the Nehru Age) என்ற நூலை எழுதினார்.  நேருவோடு எனது நாட்கள்” (My Days With Nehru) என்ற மற்றொரு நூலையும் எழுதினார்.  ஆனால், இந்த இரண்டு நூல்களையும் வெளியிட அப்பொழுது பிரதமராக பதவி வகித்த நேருவின் புதல்வி இந்திரா காந்தி தடை விதித்துவிட்டார்.  காரணம் என்ன?

இந்த நூல்களில் நேருவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு இடங்களில் குறிப்புகள் வந்தது தான் காரணம்.  நேருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் மௌண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வீனா, சரோஜினி நாயுடுவின் மகள் பத்மஜா நாயுடு, மிருதுளா சாராபாய் ஆகியோரின் பங்கு குறித்து  எழுதியிருந்த காரணத்தால், மத்தாயின் நூல்கள் வெளிவர  முடியாமல் தடைபட்டுக் கிடந்தன.  இந்திரா காந்தி பதவி இழந்த பிறகுதான், இவ்விரு நூல்களும் வெளிவந்தன.  இவ்விரு நூல்களில் முதல் நூலான ‘நேரு காலத்தின் எனது நினைவலைகள்’ என்ற நூலில் அத்தியாயம் 29 எண்ணிட்ட ‘அவள்’ என்ற பகுதி ஆசிரியராலேயே நீக்கப்பட்ட பின்புதான் வெளியிடமுடிந்தது.  அண்மையில் இந்தக் குறிப்பிட்ட ‘அவள்’ என்ற அத்தியாயம் இணைய தளங்களில் வெளிவந்தது.  படித்துப் பார்ப்பவர்களுக்கு இந்திரா காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருந்தார் என்பது தெரிய வரும்.  தனது மற்றும் தனது தந்தையின் தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கி கேள்வி எழுப்பும் ஒரு நூல் வெளிவரவே கூடாது என்பதில் இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் உறுதியாக இருந்தார்.  அப்பொழுது ஏன் இந்த அறிவுஜீவிகள் கேள்வி எழுப்பவில்லை?  பயம்தான் காரணமா?

* 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதியிட்டு ஜெண்டீ (Gente) என்ற இத்தாலிய வார இதழ் சோனியாவின் முந்தைய வாழ்க்கை குறித்து கட்டுரை ஒன்றை வெளியிடுகின்றது.  இத்தாலிய மொழியில் வெளிவந்த அந்தக் கட்டுரையில், சோனியாவின் முன்னாள் காதலர் என்று பிராங்கோ லூயிஸான் (Franco Luison) என்ற இத்தாலிய கால்பந்து வீரரை  நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றது.  ராஜீவ் காந்தியை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்புவரை, இந்தக்  கால்பந்து வீரருடன் சோனியா காந்தி வாழ்ந்த வாழ்க்கை குறித்த அந்த கட்டுரையைத் தாங்கிய வார இதழும் இந்திய மண்ணில் எந்த இடத்திலும் கிடைக்காதவண்ணம் அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தடை செய்தது. இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவமும் தற்பொழுது இணைய தளங்களில் உலா வருகின்றது.  படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும்.

நம்மை பத்து ஆண்டுகள், மன்மோஹன் சிங் என்ற முகமூடியைத் தாங்கிக் கொண்டு, உண்மையாக ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து ஆட்சி வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வது நமது உரிமையல்லவா?   எங்கே போனது எழுத்துச் சுதந்திரம்?  ஏன் மௌனம் சாதித்தன நமது நீதிமன்றங்கள்?  அப்பொழுது இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் 19(1) பிரிவுகள் நமக்கு கண்களில் தெரியவில்லையா?  பெருமாள் முருகனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு வரும் சமூக சிந்தனையாளர்கள் அன்று எங்கே சென்றிருந்தார்கள்?

* 1917 முதல் 2007ம் ஆண்டு வரை வாழ்ந்த மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளர் புருஷோத்தம் நாகேஷ் ஓக் என்பவர்.  ஹிந்து மதம் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி நூல் வடிவில் நமக்கு வழங்கியவர்.  இதிஹாச பத்ரிகா (வரலாற்று பத்திரிகை) என்ற பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தவர். அவர் எழுதிய நூல் தாஜ்மஹால் – ஒரு உண்மை கதை” (Taj Mahal – The True Story).  தாஜ்மஹாலை தனது மனைவியின் பேரில் இருந்த அன்பால் ஷாஜஹான் கட்டியதாகத்தான் நமது வரலாறு கூறுகின்றது.  ஆனால் உண்மை என்ன?  தாஜ்மஹால் என்பது உண்மையில் ஒரு சிவாலயம்.  ராஜ்புத் அரசர்களால் தேஜா மஹாலாயா (Teja Mahalaya) என்ற பெயரில்  கட்டப்பட்ட ஒரு அரண்மனையில், சிவாலயத்தின் ஒரு பகுதியை இடித்து, அதன்மீது தாஜ்மஹாலை ஷாஜஹான் காட்டினார் என்று பல்வேறு அறிவியல் ஆதாரங்களை கொண்டு விளக்கி இருக்கின்றார் ஓக்.  ஹிந்து ஆலயங்களில் காணப்படும் கலசத்தையும் திரிசூலத்தையும் தாஜ்மஹாலின் உச்சியில் இன்றும் காணலாம்.  ஆனால், இந்த நூலும் தடை செய்யப்பட்டுவிட்டது. வரலாற்றை மாற்றி எழுதிய சிலர், உண்மை வரலாற்றை யாரேனும் வெளிக்கொணர முயற்சித்தால் எப்படியாவது அதை முறியடிக்கும் நோக்கில் செயல்படுவதை காலம் சொல்லிவருகின்றது.  ஓக் எழுதிய இப்புத்தகமும் இப்பொழுதுதான் இணையதளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளது.

எழுத்தாளன் என்பவன் உண்மையை மறைக்கும் நோக்கில், தவறான வரலாற்றை சரி” என்று திசைதிருப்பும் நோக்கில், பொய்மையை உண்மையாக்கும் முயற்சியில் இறங்குவானேயானால்,  உண்மை ஏதாவது உருவத்தில் வெளிவரத்தான் செய்யும்.  அவனது தவறான நோக்கம் காலப்போக்கில் படிப்பவர்களுக்கு புரியத்தான் செய்யும்.   இன்று மாதொருபாகன்கள் வெற்றிக்களிப்பில், மீண்டும் உயிர்பெற்று எழலாம்.  ஆனால், அவர்களின் தவறான எண்ணமும் நோக்கமும் ஒருநாள் உலகத்தின் உண்மைப்பார்வைக்கு வெளிச்சமிடப்படும்.  அதுவரை, உண்மை சிறிது உறங்கட்டும்; பொய்மை ஊர்வலம் வரட்டும். பரவாயில்லை