மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக அகில பாரத வித்யார்த்தி சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடந்தது.
இதில் மத்திய அமைச்சர் பாபுள் சுப்ரியோ பங்கேற்க சென்றபோது இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமில்லாமல் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கினர்.
அதை அறிந்த மாநில ஆளுநர் விரைந்து சென்று அமைச்சரை மீட்டார். இதுகுறித்து பாஜக பொது செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா பல்கலைக்கழக வளாகத்திலேயே அமைச்சை தாக்கப்பட்டது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செயலாகும்.
முதல்வர் மம்தா பானர்ஜியால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை எனவே மேற்குவங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர மக்கள் விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் கொல்கத்தாவில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.