பாரதத்தில் உள்ள பெருநிறுவனங்களில், வெவ்வேறு வடிவங்களில் ஜிகாத் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. வெவ்வேறு வடிவங்களில் ஜிகாத் அமலாக்கப்படுகிறது. நாடு ழுமுவதும் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எல்லாவற்றைப் பற்றியும் பதிவு செய்தால், இது பல பக்கங்களுக்கு நீளும்.
2019ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நடைபெற்றுள்ள முக்கிய அசம்பாவிதங்களைப் பற்றி மட்டுமே இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது.
நாசிக்கிலுள்ள டிசிஎஸ் நிறுவனம்
டாடா கன்சல்டன்சி நிறுவனம் நாசிக் நகரில் இயங்கி வருகிறது. இங்கு ஊழியர்களை கட்டாயமாக மதமாற்றம் செய்த நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. 18 வயது முதல் 25 வயது வரையிலான இளம்பெண்களை குறிவைத்து அவர்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். தொழுகை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பர்தா அணியுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். இவ்விவகாரம் வெளியே கசிந்தவுடன் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து இந்த நிறுவனத்தை சேர்ந்த ஆசிப் அன்சாரி, ஷபிஷேக் ஆகிய அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். 9 பேர் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற அடிப்படையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலுள்ள டிசிஎஸ் நிறுவனம்
இந்த நிறுவனத்தில் டப்ரெஸ் முகமது மேலாளராக உள்ளார். இவர் ஹிந்துவாக இருந்து 2016ல் முஸ்லிமாக மாறினார். அவரது இயற்பெயர் திவாகர் என்பதாகும். டப்ரெஸ் முகமது உயர் அதிகாரி முகமது முஸ்தபாவுடன் சேர்ந்துகொண்டு, இங்குள்ள ஊழியர்களை இஸ்லாமியர்களாக மாற்றும் பணியில் தீவிரம் காட்டினார். இந்த நிறுவனத்தையே இஸ்லாமிய முகாமாக்க முயற்சி மேற்கொண்டார். இவ்விவகாரம் வெளியே கசிந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவில் பாரபட்சம்
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊழியர்களுக்கான குறிப்பேடு வெளியிடப்பட்டது. இதில் சீருடைக்குப் பொருந்தாத வகையில் குங்குமம், தாலி வளையல்கள் போன்றவற்றை அணியக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் பெண் ஊழியர்கள் குறித்து இந்த குறிப்பேட்டில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
தனிஷ்க் விளம்பர குளறுபடி
2020 ஆம் ஆண்டு டைடான் நிறுவனத்தின் நகை கடையான தனிஷ்க் பெயரில் லவ்ஜிகாத்தை மகத்துவப்படுத்தும் வகையில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்தில் மருமகளான ஹிந்து பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதாகவும், இதை இஸ்லாமியர்களான நாத்தனார்கள் உள்ளிட்ட உறவினர்கள் முன்னின்று ஏற்பாடுகளை செய்ததாகவும் காட்டப்பட்டது. இந்த விளம்பரம் ஒருதலை பட்சமானது. ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்தி காட்டுவதற்காக உண்மைக்கு புறம்பானவை சேர்க்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. எதிர்ப்பும், கண்டனமும் அதிகரித்ததை அடுத்து இந்த விளம்பரம் வாபஸ் பெறப்பட்டது.
ஹோலியை அவமதித்த சர்ப் எக்ஸல்
2019 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் சர்ப் எக்ஸல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. முஸ்லிம் இளைஞரின் ஆடை மீது வண்ணப்பொடி படாதவாறு அவரை ஹிந்துக்கள் ஒருவர் கேடயமாக காத்தார். கரைபடியாத ஆடையுடன் மசூதிக்கு சென்று தொழுகை நடத்த இது உதவிகரமாக இருந்தது. ஹிந்துக்களின் புனித திருநாளான ஹோலியை அவமதித்த சர்ப் எக்ஸலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து விளம்பரத்தை சர்ப் எக்ஸல் வாபஸ் பெற்றது.
திலகத்தை அவமதித்த
எச்டிஎப்சி வங்கி
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எச்டிஎப்சி வங்கி விளம்பர முன்னெடுப்பை தீவிரப்படுத்தியது. `விஜில் ஆன்டி’ என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த விளம்பரத்தில், திலகத்திற்கு இடமில்லை என்பதாக காட்சி இடம்பெற்றது. ஹிந்து பெண்களுக்கு திலகம் திவ்யமானது. எச்டிஎப்சியின் விளம்பரத்திற்கு கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து விளம்பரத்தை எச்டிஎப்சி வாபஸ் பெற்றது.
மும்பை லென்ஸ் கார்ட் கடை
லென்ஸ் கார்ட் நிறுவனம் கண்ணாடி விற்பனை நிலையங்களை நடத்திவருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் திலகம் அணியக்கூடாது, மோதிரமும் அணியக்கூடாது, தாலி அணியவும் அனுமதியில்லை. ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி