பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பாவேந்தர் பாரதிதாசன் ஒருநாள் பாரதியாரைப் பார்க்க வருகிறார். அன்று பாரதியாரின் மனைவி செல்லம்மாளும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தனர். பாரதிதாசன் இரவு பாரதி வீட்டிலேயே தங்கிவிட்டார்.

நடுநிசியில் பாரதி பாவேந்தரை எழுப்பி, பாலைக் காய்ச்சிக் குடிக்க நான் அடுப்பு பற்ற வைத்தேன். நீண்ட நேரமாகியும் பால் சூடேறவில்லை. கொஞ்சம் உதவி செய்யேன்” என்றார். பாவேந்தர் எழுந்து அடுப்பில் எரிந்து கிடந்த சாம்பலைத் தள்ளி தீ பற்றவைக்க மிகுந்த பிரயாசைப் பட்டார். அவரால் அடுப்பு பற்ற வைக்கவும் முடியவில்லை. பாலைக் காய்ச்சவும் முடியவில்லை.

பாரதி சிரித்தபடி சுப்புரத்தினம்! பெண்கள் செய்யும் வேலை அனைத்தையும் ஆண்கள் செய்வது சுலபமில்லை. இந்த மாதிரி வேலைகளைப் பெண்கள் நாள் முழுவதும் செய்து கொண்டு குடும்பத்தையும் பராமரிக்கிறார்கள். இதற்கிடையில் நாம் அவர்களிடம் சண்டை போடுகிறோம், திட்டுகிறோம். நான் கூட சில நேரங்களில் கோபத்தில் மனைவியை அடித்து விடுகிறேன்.

ஒருநாள் வீட்டில் பெண்கள் இல்லையென்றால்தான் அவர்களின் அருமை புரிகிறது. நாமும் உழைக்கிறோம். பெண்களும் உழைக்கிறார்கள். அதனால்தான் குடும்பம் சீராக நடக்கிறது” என்றார்.

இந்தச் சிந்தனை தந்த பாதிப்பில் தான் மறுநாள் காலையில் பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்று பாடத் தொடங்கினார் பாரதி.

 

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்