லகளாவிய மனித நேயத்தின் அடிப்படை வர்க்கமோ வகுப்போ அல்ல, தேசம்தான் அடிப்படை. இதைக் கருத்தில் கொண்டுதான் ‘தொழிலாளர்களே, அகிலத்தை ஒருங்கிணையுங்கள்’ என்ற முத்திரை முழக்கத்தை பி.எம்.எஸ் முன்னெடுத்தது. ஆனால், பிளவுவாத கம்யூனிஸ்ட்கள்‘ உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்’ என்ற கோஷத்தைத் தொடர்ந்து எழுப்பி வந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறை ஒற்றுமையை
யும், ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தும் வகையில் இல்லை. மாறாக, உலகத்தையும் மக்களையும் சிதறடிக்கும் வகையில் இருந்தது.
ஒவ்வொரு நாடும் மனிதநேயக் கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இந்த நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மனிதநேயம் சார்ந்த அகிலமாக உருவெடுக்க வேண்டும் என்பது
தான் நமது லட்சியக் கண்ணோட்டம்” என்று 1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் முதலாவது ஆண்டு மாநாடு நடைபெற்ற போது அதன் அமைப்புச் செயலாளர் தத்தோபந்த் தெங்கடிஜி, தான் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயகத்தில் அமைப்பு ஒன்றைத் தொடங்குவது மிகவும் எளிது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அமைப்பைத் தொடங்கி விடலாம். ஆனால், எந்த லட்சியங்களை அடித்தளமாகக் கொண்டு அமைப்பு தொடங்கப்பட்டதோ, அதை ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைப்பது ஹிமாலயப் பணியாகும்.
சுரண்டலை மையமாகக் கொண்ட முதலாளித்துவத்திற்கு மாற்று சோஷலிஸம், கம்யூனிஸம் என்ற கருத்து சர்வதேச அளவில் மேலோங்கி இருந்தது. அந்த காலகட்டத்தில் ‘தேசத்தைத் தொழில் மயமாக்குங்கள், தொழிலைத் தொழிலாளர் மயமாக்குங்கள், தொழிலாளர்களைத் தேசிய சிந்தனையில் ஆற்றுப்படுத்துங்கள்’ என்ற கோஷத்தை பி.எம்.எஸ் முன் வைத்தது. இதை அப்போது மற்றவர்கள் எள்ளி நகையாடினார்கள்.
1955ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி தொடங்கப்பட்ட பாரதிய மஸ்தூர் சங்கம், 70 ஆண்டுகளைக் கடந்து எழுச்சி நடைபோடுகிறது. இந்த இனிய தருணத்தில், இது எத்தகைய பாதையில் பயணித்து வந்துள்ளது, எத்தகைய சவால்களை எதிர்கொண்டுள்ளது, எத்தகைய தடத்தில் எதிர்காலத்தில் பயணிக்க இருக்கிறது உள்ளிட்ட அம்சங்களைக் கவனிப்போம்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரச்சாரக்கான தத்தோபந்த் தெங்கடிஜி, மற்ற தொழிலாளர் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதற்காக, அவற்றோடு கலந்து பழகினார். இந்தத் தொழிலாளர் சங்கங்கள் யாவும் உண்மையில் தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபடவில்லை. தொழில் வளர்ச்சிக்காகவோ அல்லது தேசத்தின் எழுச்சிக்காகவோ துரும்பைக்
கூட கிள்ளிப் போடவில்லை. இந்தத் தொழிற்
சங்கங்கள், அரசியல் ஆதாயத்திற்காக தொழிலாளர்
களைத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றன என்பதை தத்தோபந்த் தெங்கடிஜி நன்கு புரிந்துக் கொண்டார். வர்க்கப் போராட்டம் மட்டுமே தீர்வு என்று செங்சொடி ஏந்திய கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து கூறி வந்தார்கள். தொழிலாளர் துறையிலோ அல்லது பொருளாதாரத் துறையிலோ பாரதிய சிந்தனை எதுவும் கிடையாது என்பதுதான் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்து.
கார்ல்மார்க்ஸ் மதமே கூடாது என்றார். ஆனால், மார்க்சிஸ்ட்டுகள், அவரையே கடவுளாக்கி வழிபடத் தொடங்கி விட்டார்கள். மார்க்சிஸத்துக்கு எதிராக கருத்து சொல்பவர்களைத் தொழிலாளர் விரோதி என்றே கம்யூனிஸ்ட்டுகள் கருதினார்கள். ராஷ்ட்ரம் அல்லது தேசத்தை மார்க்சிஸ்ட்டுகள் பொருட்படுத்தவில்லை. சர்வதேசியவாதியாக இருக்க வேண்டுமானால், தேசம் என்ற குறுகிய வட்டத்திற்கு உட்பட்டதை நிராகரிக்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட்டுகளின் கருத்து.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கச் சாலக் குருஜி கோல்வல்கரின் வழி
காட்டுதல்படி பாரதிய விழுமியங்களைத் தத்தோபந்த் தெங்கடிஜி கிரகித்துக் கொண்டார். பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயம் எனப்படும் ஏகாத்ம மானவ வாதத்தை தெங்கடிஜி உள்வாங்கிக் கொண்டார். இப்பின்னணியில்தான் தொழிலாளர் இயக்கத்துக்குத் தேசியப் பார்வை அவசியம் என்ற முடிவுக்கு தெங்கடிஜி வந்தார்.
இப்போது தொழிலாளர்களிடையே பி.எம்.எஸ் ஆழமாக வேரூன்றி விட்டது. காவிக்கொடி பறக்கிறது. ‘பாரத் மாதாகி ஜே’ என்ற முழக்கம் ஒலிக்கிறது. இவை யாவும் 70 ஆண்டு கால உழைப்பின் விளைவுகள். முன்பெல்லாம் தொழிலதிபர்களுக்கும், தொழிற்சங்கப் பிரதிநிதி
களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அடுத்தபடியாக மூன்றாவது தரப்பாக அரசும் இதில் சேர்ந்து கொண்டது. தொழிலாளர்கள் சார்ந்த கொள்கைகளை வகுப்பதில் பி.எம்.எஸ் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கிறது. போராட்டம் நடத்த பி.எம்.எஸ் ஒருபோதும் தயங்கியதில்லை.
சுயதொழில் செய்வோரைப் பற்றி மார்க்சிஸ்ட்டுகள் கவலைப்பட்டதேயில்லை. ஆனால், விஸ்வகர்மா மரபு நம் பாரம்பரியத்தில் உள்ளது. விஸ்வகர்மா ஜெயந்தி தினமான செப்டம்பர் 17ம் தேதியைத் ‘‘தேசிய தொழிலாளர் தினமாக’’ பி.எம்.எஸ் கொண்டாடுகிறது. அமைப்புச் சாரா தொழிலாளர்
களுக்கும் இது பொருந்தும். ஏறத்தாழ 90 சதவீதத்தினர் அமைப்புச் சாரா தொழிலாளர்களே. அங்கன்வாடி ஊழியர்கள் முதல் வீட்டுப் பணிப்
பெண்கள் வரை ஏராளமானோர் இப்பிரிவின் கீழ் தான் வருகின்றனர். அவர்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க பி.எம்.எஸ் வழிவகை செய்துள்ளது. தேசிய அளவில் மட்டுமல்லாமல், அகில உலக அளவிலும் பி.எம்.எஸ் மிகப்பெரிய தொழிலாளர் கூட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. பல்வேறு அரசுகளும், சர்வதேச அமைப்புகளும் பாரதிய மஸ்தூர் சங்கத்தை அங்கீகரித்துள்ளன.
பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய ஆலோசனைகளுக்கு பி.எம்.எஸ் ஆண்டுதோறும் அழைக்கப்படுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இது தொடர்கிறது. இதைப்போல, சர்வதேச தொழிலாளர் சங்கமும், தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த தவறாமல் பி.எம்.எஸ் அமைப்புக்கு அழைப்பு விடுக்கிறது.
வசுதைவ குடும்பகம் நமது அகிலமளாவிய கண்ணோட்டமாகும். எல்லா நாடுகளும் பண்பாட்டு ரீதியாக, தனித்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் நமது எண்ணம். இதை பி.எம்.எஸ் நனவாக்கி வருகிறது.
ஆசிரியர், ஆர்கனைசர் ஆங்கில இதழ்
ஆர்கனைசரிலிருந்து தமிழில் அடவி வணங்கி