பிரான்ஷுக்கு கைகொடுக்கும் பாரதம்

கொரோனா தாக்கம், சூரியஒளி பயன்பாடு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பாரத பிரதமர் மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மெக்ரானும் கடந்த திங்கள் அன்று பேசினர். அப்போது பிரான்ஸில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மோடி தன் வருத்தத்தை தெரிவித்தார். மேலும் பிரான்ஸின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குப் பாரதம் தன் முழு ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.