உணவு வர்த்தக விற்பனையாளர்கள் தொழில் செய்வதற்கு பெறப்படும் உரிமங்கள் மற்றும் பதிவு போன்ற சேவைகளை எளிதாக்கும் பொருட்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), ஹிந்தி, ஆங்கில மொழிகளில் உள்ள உணவு பாதுகாப்பு இணக்க அமைப்பின் (FOSCOS) இணையதள விண்ணப்பங்களை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக சுமார் 1.2 கோடி பேர் தங்களின் உரிமங்களை புதுப்பிப்பது தொடர்பாக உணவு வர்த்தக விற்பனையாளர்கள் அமைப்பில் பதிவு செய்துள்ளனர். உணவு பாதுகாப்பு அமைப்பில் வலுவான, அதிகளவில் மக்களை சென்றடைவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பல்வேறு எளிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதல் கட்டமாக உரிமம் மற்றும் பதிவு போன்றவற்றிற்கு விண்ணப்பிப்பவர்களை கருத்தில் கொண்டு இணையதள விண்ணப்பம் அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படுகிறது. இதன் விளைவாக வருவாய் அதிகரிப்பதோடு, அதிகளவில் மக்களை சென்றடைந்து, உலகத்தர அனுபவத்தை வழங்கும்.