கடந்த வாரம் வெளியிட்ட ‘டுவிட்’ செய்தியில், ‘இந்த மகளிர் தினநாளில் (நேற்று), எனது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தையும் தங்கள் வாழ்க்கையாலும், பணியாலும் நமக்கு உத்வேகம் அளித்த பெண்களிடம் வழங்கப்போகிறேன். இது லட்சக்கணக்கானவர்களை ஊக்கமூட்டுவதற்கு அவர்களுக்கு உதவும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிரதமர் அறிவித்தபடியே நேற்று ஒருநாள் தனது வலைத்தள கணக்குகளை 7 பெண் சாதனையாளர்களிடம் வழங்கினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் கூறியதுபோல, சமூக வலைத்தள கணக்குகளை பெண் சாதனையாளர்களிடம் அளிக்கிறேன். இந்த கணக்குகள் மூலம் 7 பெண் சாதனையாளர்கள் நாள் முழுவதும் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்வார்கள். சில நேரங்களில் உங்களுடன் கலந்துரையாடலும் நடத்துவார்கள்’ என்று கூறியிருந்தார்