நாடுமுழுவதும் உள்ள 2,400-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள், 1,300-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் நாளை ஓடாது என இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்களின் தேவை கருதி மின்சார ரயில்களை சிறிய அளவில் இயக்குவது குறித்து அந்தந்த மண்டல மேலா ளர்களே முடிவு செய்து கொள்ள லாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கேரளா, கர்நா டகா, ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் 21-ம் தேதி (இன்று) முதல் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறி கள், மருந்துகள், அவசர கால வாகனங்கள் , சமையல் எரிவாயு உருளைகள் ஏற்றி வரும் வாகனங் கள், தவிர்க்க இயலாத காரணங் களான இறப்பு போன்ற காரணங் களுக்காக பயணிக்கும் பயணி களின் இலகுரக வாகனங்கள், பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அள வில் இயக்கப்படும் அரசு பேருந் துகள் மட்டுமே இந்த சாலை களில் அனுமதிக்கப்படும். இந்த வாகனங்களில் வருபவர்கள் அனை வரும் நோய்த்தடுப்பு பரிசோத னைக்கு உட்படுத்தப்படுவர்’ என கூறப்பட்டுள்ளது..
தமிழகம் முழுவதும் கடைகள், ஓட்டல்கள் நாளை மூடப்படுகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறும்போது, ‘‘பிரதமரின் வேண்டு கோளை ஏற்று, தமிழகம் முழு வதும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழு கடையடைப்பு செய்யப்படும். அன்று வணிகர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து கரோனா வைரஸை தடுக்க தமது பங்களிப்பை தேசத்துக்கு அளிக்க வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவைத் தலைவர் த.வெள் ளையன் கூறும்போது, ‘‘பிரதமரின் அறிவிப்பை ஏற்று மார்ச் 22-ம் தேதி ஒருநாள் தமிழகம் முழுவதும் வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து கரோனா குறித்த விழிப்புணர்வை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.
பால் விநியோகம் நிறுத்தம் தமிழ் நாடு பால் முகவர்கள் தொழிலாளர் கள் நலச் சங்க மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 21-ம் தேதி காலை, மாலை என இருவேளை களில் கூடுதலாக பால் கொள் முதல் செய்து, அன்றைய தினம் இரவு கூடுதல் நேர மும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 முதல் காலை 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் செய்யப்படும்.
மத்திய அரசின் அறிவிப் புக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பால் முகவர்களும் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநி யோகத்தில் ஈடுபட மாட்டர்கள்’ என்று தெரிவித் துள்ளார்.