போன வாரம் நமது பிரதமர் மோடியை டெல் அவிலில் வரவேற்ற இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இந்தியப் பிரதமருக்காக 70 ஆண்டுகள் காத்திருந்தோம்” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார். உலகம் முழுவதும் யூதர்கள் வேட்டையாடப்பட்டபோது அவர்களுக்கு புகலிடம் கொடுத்த பாரதத்தின் பிரதமரை இஸ்ரேல் எப்போதும் நன்றியுடனும் அன்புடனும் எதிர்நோக்கி இருந்திருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ள இந்திய அரசுக்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
தலைநகர் ஜெருசலேமின் பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இரு கரங்களை கூப்பியவாறு ‘தங்களது வரவு நல்வரவாகுக…’ என்று ஹிந்தி மொழியில் கூறி மோடியை அன்புடன் வரவேற்றார். அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபருக்கும், போப் ஆண்டவருக்கும் மட்டுமே அளிக்கப்படும் வரவேற்பு முறையில் மோடி வரவேற்கப்பட்டார்!
‘இந்தியா-இஸ்ரேல் இடையிலான நட்புறவுக்கு வானத்தைக் கூட எல்லையாக வைத்து அளவீடு செய முடியாது‘ என குறிப்பிட்ட பெஞ்சமின் நேதன்யாகு, உலகின் மிகப் பெரிய தலைவராக விளங்கும் மோடியுடன் இணைந்து நாம் இன்னும் அதிகம் சாதிக்கலாம் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார். விண்வெளி ஆராச்சியில் இந்தியாவுடன் கைகோர்க்கும் இஸ்ரேலுக்கு வானம் கூட எல்லையாக முடியாதுதான்.
அவரது வரவேற்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, ‘இந்தப் பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும். இஸ்ரேலுடன் வலிமையான, அசைக்க முடியாத நட்புறவை ஏற்படுத்துவதே எனது வருகையின் முக்கிய நோக்கம்’ என்று தெரிவித்தார்.
மோடி தனது வெளிநாட்டுப் பயணங்களை மிகவும் திட்டமிட்டு வழிநடத்துவது, இஸ்ரேலிலும் வெளிப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, 2008 மும்பை குண்டுவெடிப்புத் இருந்து தப்பி உயிர் பிழைத்த யூதக் குழந்தையான – தற்போது 11 வயது சிறுவனாக உள்ள மோஷே ஹோல்ட்பெர்கையும், அவனது உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பெண் சான்ட்ராவையும் மோடி சந்தித்தது அந்நாட்டு ஊடகங்களில் தலைப்புச் செதியானது. டெல் அவிவ் நகரில் வாழும் சுமார் 4,000 இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து மோடி உரையாடினர்.
கேரள மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட யூத மொழி செப்புத் தகடுகளின் மாதிரியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பரிசாக வழங்கி ஆனந்த அதிர்ச்சி அளித்தார் மோடி. பதிலுக்கு, டான்சிகர் டான் மலர்ப்பண்ணைக்கு மோடி விஜயம் செதபோது, இஸ்ரேலில் சமீப காலமாக பெருமளவில் வளரும் ’இஸ்ரேலி கிரைசாந்தமம்’ என்ற மலரினத்துக்கு மோடியின் பெயரை சூட்டியது அந்நாட்டு அரசு!
ஹிட்லரின் நாஜிப் படையால் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்கள் நினைவாக அமைக்கப்பட்ட வஷேம் நினைவிடத்திலும், முதல் உலகப்போரின்போது இஸ்ரேலின் ஹைஃபா நகரை மீட்க வெற்றிகரமாகப் போராடி உயிர் நீத்த இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைஃபா நினைவிடத்திலும் மோடி அஞ்சலி செலுத்தினார். இவை வெறும் அடையாள நிகழ்வுகள் அல்ல.
நேதன்யாகு – மோடி சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இஸ்ரேல் தொழில் அதிபர்களையும் மோடி சந்தித்தார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். புதுமைக் கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆராச்சி, விவசாயம், நீர்ப் பாதுகாப்பு, தொழில் துறை உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இரு தலைவர்களும் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மறைந்த கணிதமேதை ராமானுஜத்தை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். இந்திய மக்களுக்காக நாங்கள் சிறப்பான நிர்வாகத்தை கொண்டுள்ளோம். மறைந்த எனது மாமா கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் என்னிடம் கணிதமேதை ராமானுஜத்தின் அறிவு குறித்து பெருமையாக பேசுவார். இந்தியர்கள் எவ்வளவு திறமை மிக்கவர்கள் என்பதற்கு ராமானுஜம் ஒரு எடுத்துக்காட்டு” என்றார் அவர்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா- இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் இணைந்து போராடுவோம் என்று மோடியும் நேதன்யாகுவும் கூட்டாக அறிவித்தனர்.
இவ்வாறாக, பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளிடையிலான உறவில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளுடன் நல்லுறவைப் பேணியபடியே, இஸ்ரேலுடனும் நட்புறவைத் தொடர முடியும் என்று நிரூபித்திருக்கிறது மோடி அரசு.
இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடிய நச்சுப் பற்களில் சிக்கி பாதிக்கப்பட்ட இரு நாடுகளான இந்தியாவும் இஸ்ரேலும் நெருங்கி வருவது, பயங்கரவாத அரக்கனுக்கு எமனாகப் போகிற சர்வதேச சக்ராயுதம்.
******************************************
தயக்கத்திற்கு முற்றுப்புள்ளி, அதிரடி ஆரம்பம்
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இத்தனை ஆண்டு காலத்தில் இஸ்ரேல் நாட்டுடன் எந்த அரசும் உறவை வலுப்படுத்த முயன்றதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகளிடையிலான அரசியல் காரணமாகவும், அரபு, இஸ்லாமிய நாடுகளின் பகையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சம் காரணமாகவும், யூத மக்களின் தாயகமான இஸ்ரேலுடன் நெருங்குவதை இதுவரையிலான அரசுகள் தவிர்த்து வந்தன. பாஜக மட்டுமே இஸ்ரேலுடனான உறவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில்தான் இஸ்ரேலுடன் தூதரக உறவே அரும்பியது. வாஜ்பா பிரதமராக இருந்தபோது அது மேலும் வலுப்பட்டது. ஆனால், அடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு இஸ்ரேலை வேண்டாத விருந்தாளியாகக் கருதி புறக்கணித்தது. இந்நிலையில், வாஜ்பாயின் அடியொற்றி, மோடி தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்த பல முயற்சிகளை எடுத்தது. தற்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயம், அந்நாட்டு மக்களை மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இஸ்ரேல் சென்ற முதல் இந்தியப் பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.
******************************************