” ஆப்கானிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் ஹிந்துக்கள் ஆகியவர்களைப் பற்றி அங்கு அவ்வப்போது நடக்கும் மக்கள்தொகை புள்ளிவிவரங்களை நாம் பார்த்தால் மிகப் பெரிய எண்ணிக்கையில் இந்த சிறுபான்மை சமுதாயத்தின் எண்ணிக்கை நிரந்தரமாக வீழ்ந்திருப்பது கவனத்திற்கு வருகிறது. இவர்கள் எங்கு போனார்கள் என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் பெரும் எண்ணிக்கையில் பாரதத்தின் எல்லைக்குள் வந்துள்ளனர் என்று நாம் அனுபவத்தில் உணர்கிறோம். எந்த ஒரு இரண்டாவது நாட்டின் குடிமக்கள் அன்னிய நாட்டுக்குள் வந்து விட்டால் அவரை அயல்நாட்டுக் குடிமகன் என்று சொல்கிறோம். இந்த நாடுகளில் இருந்து அடித்து விரட்டப் படும் ஹிந்து சமுதாயத்தின் மக்கள் எங்கு போவார்கள்? பாரதத்தைத் தவிர அவர்களுக்கு கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையை அனுபவிக்க அவர்களுக்கு வேறு எந்த ஒரு இடமும் இல்லை. இதன் பொருட்டே பாரதத்திற்குள் வந்தனர். “
சுரேஷ் (பையாஜீ) ஜோஷி,
ஸர்கார்யவாஹ்,
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.