பாரதத்தின் பெருமையை உலக அரங்கில் சிறுமைப்படுத்திய ராகுல் காந்தி

திருவாளர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில், இந்தியா உலக அளவில் கற்பழிப்புகளின் தலைநகரமாக இருக்கிறது.  அந்நிய நாட்டினர், இந்தியா தனது மகள்கள் மற்றும் சகோதரிகளுக்குப் பிறகு , மற்ற பெண்களை ஏன் அது போல் பார்க்க முடியவில்லை என்ற கேள்வியை கேட்கிறது என கூறியுள்ளார்.  உலகத்தில் பாரத தேசத்தில் மட்டுமே கற்பழிப்பு நடப்பதாகவும், அதுவும் கடந்த ஐந்தாண்டுகளாக மட்டும் நடப்பதாக உலக அரங்கில் ஒரு பிம்பத்தை உருவாகியவர்கள் அந்நிய ஊடகங்களான ராய்டர் மற்றும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்றவை.    அந்நிய ஊடகங்களுக்கு துணை போகும் பாதையில் ராகுல் காந்தி கூறியது அமைந்துள்ளது.

          உண்மையில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் கற்பழிப்பு அதிக அளவில் நடப்பதாக காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகள் கூச்சல் எழுப்புகிறார்கள்.  2004 முதல் 2014 மே மாதம் வரை ஆட்சியிலிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், காவல் துறையின் மூலமாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பற்றிய விவரங்களை பார்த்தால், யாருடைய ஆட்சியில் அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றன என்பது தெரியும்.  திருவாளர் ராகுல் காந்தியின் கனிவான பார்வைக்கு, 2009 முதல் 2011 வரை பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 68,000.  நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்ற வழக்கு வெறும் 16,000 மட்டுமே.  அப்பொழுது ராகுல் காந்தி வாய் திறக்கவில்லை.   2009-ல் பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்களின் எண்ணிக்கை 21,397,  2010-ல் 22,172 –ம், 2011-ல் 24,206 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அப்பொழுது  இந்தியா கற்பழிப்பு தலைநகரம் என கூறவில்லை.    2009 முதல் 2011 வரை மேற்கு வங்க மாநிலத்தில் 7,010 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.   இதில் வெறும் 381 வழக்குகள் மட்டுமே தண்டனை பெற்றது.  மற்ற வழக்குகள் மம்தாவுக்கே வெளிச்சமாகும்.

          உலகில் அதிக அளவில் கற்பழிப்பு சம்பவங்கள் நிறைந்த நாடு, தென் ஆப்ரிக்கா, சிரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, பாகிஸ்தான், காங்கோ, யேமன்,  நைஜீரியா, எகிப்து, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வருகின்றன.    இங்கிலாந்து நாட்டில், ஒவ்வொரு வருடமும் 85,000 பெண்கள் பாலியல் தொல்லைக்கு உட்படுகிறார்கள்.  ஒரு மணி நேரத்தில் 11 பேர்கள் கற்பழிக்கப்படுவதாகவும்,  இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் ஆண்டுக்கு 50 சதவீதமான வயதிற்கு வந்தவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆட்படுகிறார்கள்.  பெண்களில் 16 வயது முதல் 59 வரை உள்ளவர்களே அதிக தொல்லைக்கு ஆளாவதாகவும் கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண்களில் 15 சதவீதமானவர்கள் மட்டுமே காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. (ஆதாரம்  www.rapecrisis.org.uk/statistics.php)  8.2.2018ந் தேதி  வெளியான தி கார்டியன் பத்திரிக்கையில், ஐந்து பெண்களுக்கு ஒரு பெண் 16 வயதிற்குட்டபட்டவர்கள்  பாலியல் தொல்லைக்கு உட்படுகிறார்கள்.  இது இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடக்கிறது  2018 ஜனவரியில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பின் படி மொத்த மக்கள் தொகையில் 3.1 சதவீதமான பெண்கள் பாலியல் தொல்லைக்குட்படுவதாகவும்,  16 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் என்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த புள்ளி விவரங்கள் ராகுல் காந்திக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.  ஏன் என்றால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் தன் நாட்டிற்கு விரோதமாக கருத்துக்களை முன் வைக்க மாட்டார்.

          சி.என்.என். நிறுவனம் 2017 நவம்பர்  மாதம் வெளியிட்ட ஒரு செய்தியில் ஜிம்பாகுவே மற்றும்  ரூவாண்டாவில் 3 பெண்களுக்கு ஒரு பெண் பாலியல் தொல்லைக்குட்படுகிறாள்.  87 சதவீதமான பெண்கள் ஏதோனும் ஒரு வகையில் பாலியல்  தொல்லைக்கு ஆட்படுவதாகவும் கூறப்படுகிறது.  2010-ல் வெளியான ஒரு புள்ளி விவரத்தின் படி, அமெரிக்காவில் 84,767 பெண்களும், மெக்ஸிக்கோவில் 14,993 பெண்களும், சௌத் ஆப்ரிக்காவில் 66,196 மகளிரும் பாலியல் தொல்லைக்குட்படுகிறார்கள்.  இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போகிறது என்றும் கூறப்படுகிறது.   2015-ல்அமெரிக்காவில் உள்ள 27 பல்கலைகழகங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்  படி, 23 சதவீத பட்டபடிப்பு படிக்கும் மாணவிகள் பாலியல்  தொல்லைக்குட்படுகிறார்கள் என கூறப்படுகிறது.  இப்படிப்பட்ட செய்திகள் இருக்கும் போது, இந்தியா கற்பழிப்பின் தலைநகரம் என கூறுவது, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் சிறுமைபடுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

          2013-லிருந்து இன்று வரை எடுத்த கருத்து கணிப்பில்,  பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு அதிகமாக உட்படுத்தும் இஸ்லாமிய  நாடுகளில் எகிப்து முதலிடத்திலிருக்கிறது.  உலகில் பெண்கள் கொடுமைக்குள்ளாகும் நாடுகளின் வரிசையில் இஸ்லாமிய நாடுகளில் அதிக அளவில் நடக்கிறது என ராய்டர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  அதாவது 99.3 சதவீதமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள் என்பதாகும்.  அரபு நாடுகளில் முதலில் வருவது தென் ஆப்ரிக்கா.  இந்த நாட்டில் கற்பழிப்பு சம்பவம், ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஆண்டுக்கு சராசரியாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள்.

          உலக நாடுகளில் கற்பழிப்புக்கு தலைநகரம் தென் ஆப்பரிக்கா என பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   திருவாளர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து முற்றிலும் தென் ஆப்பரிக்காவை சாரும்.  இன்டர் போல் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1994லிருந்து ஆண்டுக்கு 16,000  பெண் குழந்தைகள் கற்பழிப்படுவதாகவும்,   கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 3,60,000க்கும் அதிகமான பெண்கள் கற்பழிக்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.  தினசரி சாராசரியாக 170 பெண்கள் தென் ஆப்பரிக்காவில் கற்பழிக்கப்படுகிறார்கள்.  2018-ல் மட்டும் 27 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டுள்ளது.  இந்த விவரங்கள் தெரியாமல், மோடியை தாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, பாரத தேசத்தின் பெருமையை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காவே ராகுல் காந்தி பேசியது, காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல.

       உலகில் பெண்ணை தெய்வமாக மதிக்கும் நாடு பாரத தேசம்.  அனைத்து பெண்களையும் தாயாக பார்பதால்,  பிறந்த நாட்டை தாய் நாடு என கூறுகிறேம்.  உலகில் எந்த நாடும்,  தனது நாட்டை தாய்நாடு என கூறுவதில்லை என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்.  நதிகளுக்கு பெண்கள் பெயர்கள் வைப்பதற்கு முக்கியமான காரணம், அது பூஜிகப்பட வேண்டும் என்பதற்காகவே.   தன் மனைவியை தவிர மற்ற பெண்களை சகோதரிகளாகவும், தாயகவும் பார்க்கும் பூமி பாரத பூமி என்பது ராகுல் காந்திக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *