பயத்தில் எதிர்கட்சிகள்

பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள் தற்போது பா.ஜ.கவுக்கு எதிராக தங்களின் ரௌடிகளை தூண்டிவிட்டு அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூரில் பாஜக கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அகற்றியுள்ளனர். இதேபோல பா.ஜ.க மதுரை புறநகர் அலுவலகத்தையும் சில சமூகவிரோதிகள் அடித்து உடைத்துள்ளனர். மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மதுரையில் ‘நம்ம ஊர் தாமரை பொங்கல்’ விழாவில் கலந்துகொள்ள செல்கையில் அவர் செல்லும் வழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர், தி.மு.கவினர்  மறியல் போராட்டம் செய்துள்ளனர். இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது தமிழக காவல்துறை விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.