தமிழகத்தை சேர்ந்த ஜீவித், ஸ்ரீஜின் போன்றோர் தேசிய அளவில் சாதனை, 57215 பேர் தேர்வு, தமிழக பாடதிட்டதில் இருந்தே 97% கேள்விகள் என்ற நீட் தேர்வு முடிவுகள், இன்று போலி போராளிகள், நடிகர்கள், அரசியல்வாதிகள், கல்வி தந்தைகள், பிரிவினைவாதிகள் என பலரை கலங்கடித்துள்ளது.
தற்கொலை நடக்காதா, பிண அரசியல் செய்யமுடியாதா என ஏங்கியவர்களுக்கு ஏமாற்றம்.
நீட் பயத்தால் தற்கொலை செய்த மூவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு 57215 பேர் தேர்ச்சியை ஜீரணிக்க முடியவில்லை.
கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவிகிதம் அதிகம் ஆனால் அதை கணக்கிடாமல், 2570 பேர் குறைவு, முடிவுகள் வெளியிடுவதில் குழப்பம், நீதிபதி கண் கலங்கினார் என்ற ஸ்டாலினின் அறிக்கை ‘விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதையே நினைவூட்டுகிறது. இவர் என்ன எதிர்பார்க்கிறார்? எழுதிய அனைவரும் தேர்ச்சி, அனைவருக்கும் மருத்துவ சீட் என்ற அறிவிப்பையா? தமிழகத்தில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ மாணவர்களுக்கான மொத்த இடங்கள் பத்தாயிரத்திற்கும் குறைவே.
எப்படி அனைவருக்கும் இடம் கிடைக்கும்? புரிந்துதான் பேசுகிறாரா ஸ்டாலின்.
அரசு பள்ளியில் படித்த, திறமை உள்ள ஏழை மாணவர்களும் மருத்துவராகலாம் என்பதை நீட் தேர்வு நிரூபிக்கிறது.
நீட் தேர்வை அறிமுகம் செய்த காங்கிரசுக்கும், அதை வெற்றிகரமாக செயல்படுத்தி ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பாஜகவுக்கும் வாழ்த்துக்கள்.
பணம் இருந்தால் படிப்பை வாங்கலாம் என்றில்லாமல், திறமை இருந்தால் ஏழையும் விரும்பியதை படிக்கலாம் என்பதை நிரூபித்த நீட் தேர்வை, மற்ற உயர் கல்விகளுக்கும் விரிவுப்படுத்துவதை அரசு சிந்திக்கலாம்.