நிலத்தை காணவில்லை

ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக, ஐந்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது என தமிழக அரசு கூறிக்கொண்டிருந்தது. ஆனால் சட்டசபையில்,  நான்கே முக்கால் லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளதாக திட்டமிட்டே குறைத்து தெரிவித்துள்ளது. இதன்படி சுமார் 50,000 ஏக்கர் நிலம் கணக்கில் வரவில்லை. பல கோயில் சொத்துக்கள் எங்குள்ளன என்று கோயில் நிர்வாகத்துக்கே தெரியவில்லை. பல ஆவணங்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை மீட்கவும், குற்ற வழக்கு பதிவு செய்யவும் நில அளவைத்துறை, பத்திரப்பதிவுத்துறை போன்ற துறைகளை ஒருங்கிணைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு, நிலங்களை அளவீடு செய்யவில்லை, இது நீதிமன்ற அவமதிப்பு. உண்மையில், அறநிலையத்துறைக்கு சொந்தமாக, பத்தேகால் லட்சம் ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இதனை மீட்க அரசு துவங்கியுள்ளது என திருத்தொண்டர் திருச்சபையின் நிறுவனத்தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.