நாயகனுக்கு ஓர் அருங்காட்சியகம்

கோரி முகமது போன்ற ஒரு கொடுங்கோலனை எதிர்த்து போர்கள் பல புரிந்த வரலாற்று புகழ்மிக்க ஹிந்து அரசர் பிருத்விராஜ் சௌஹான். இவரை போன்ற வீரர்களின் வரலாறுகள் திட்டமிட்டே மறைக்கப்பட்டன. இந்நிலையில் சௌஹானுக்கு என தனியாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கும் முயற்சியில் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளது. அடுத்த வருடத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாயி காலத்திலேயே திட்டமிடப்பட்ட இந்த பணி பல்வேறு காரணங்களினால் நின்றுவிட்டது. அது தற்போது மீண்டும் துவங்கியிருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.